சிவக்குமாரின் மகனாக அதாவது வாரிசு நடிகராக நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகர் சூர்யா. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சாக்லேட் பாயாக மட்டுமே நடித்தார். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த காக்க காக்க, பாலா இயக்கத்தில் அடுத்த நந்தா, பிதாமகன் போன்ற படங்கள் சூர்யாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.
அதன்பின் படிப்படியாக உயர்ந்து பல படங்களிலும் நடித்து கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறினார் சூர்யா. குறிப்பாக ஹரி இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்களின் வெற்றி சூர்யாவை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.
சூர்யாவின் படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது. எனவே கடந்த பல வருடங்களாகவே சூர்யாவின் திரைப்படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது
. இந்நிலையில்தான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் ரஜினி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேருக்கு நேர் படத்தை பார்த்த பிறகு இந்த பையனுக்கு நடிக்கவே தெரியல.. இவன் சினிமாவில் நடிகனா நீடிக்க மாட்டான் அப்படின்னு நான் முடிவே பண்ணிட்டேன்.. ஆனா அப்புறம் பார்த்தா நந்தா, பிதாமகன், காக்க காக்க, கஜினி, அயன், சிங்கம், சிங்கம் 2ன்னு இவர் நடிக்கலனா அந்த படத்துல வேறு யாராலும் நடிக்கவே முடியாதுன்னு சொல்லுமளவுக்கு ஒரு சிறந்த நடிகராக மாறிவிட்டார்’ என ரஜினி பேசியிருக்கிறார்.
பொதுவாக சினிமாவில் ரஜினி ஒரு விஷயத்தை கணித்தால் அது தவறாது. சூர்யா விஷயத்தில் ரஜினி கணித்தது நடக்கவில்லை. ஒருபக்கம் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு தற்போது மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தமிழ்,மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. சிங்கம் 3-க்கு பின் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா.
