எனக்கு ரெண்டே வில்லன் தான்...! இதுவரைக்கும் மூடி வைத்திருந்த ரகசியத்தை உடைத்த ரஜினி...!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80 களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் இன்று வரை அதே ஸ்டைலுடன் தன் ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டு வருகிறார். ’வயதானாலும் இன்னும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல’ என்ற வசனத்திற்கேற்ப அதே தெம்புடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இவரின் கெரியரில் வந்த படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு விதத்தில் மக்களை ரசிக்க வைத்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இவர் ஒரு விழா மேடையில் இரு படங்களை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். அவர் கூறுகையில் இதுவரை அவர் நடிப்பில் இரண்டு வில்லன்களை மறக்க முடியாது என கூறினார்.
மேலும் அவர் ரசித்ததிலும் சரி பிரமிப்பில் ஆழ்த்தியதும் சரி அந்த இரு வில்லன்கள் என கூறினார். பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன். அந்த படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அத்தனை பேரையும் பயத்தில் ஆழ்த்தியிருப்பார்.
மற்றொருவர் படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க கூடாது என்ற உதாரணத்தில் நடித்து ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியிருப்பார். இந்த இரு வில்லன்கள் தான் ரஜினிக்கு மிகவும் முக்கியமானதும் மனதை தொட்ட கதாபாத்திரமும் என அவரே தெரிவித்திருந்தார்.