More
Categories: Cinema History Cinema News latest news

கலைஞரின் வசனத்தில் நடிக்க மறுத்த ரஜினி!.. காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!..

Actor rajinikanth: தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையில் தான் பார்த்து வந்த பேருந்து நடத்துனர் வேலையை விட்டுவிட்டு சென்னை நடிப்பு கல்லூரியில் பயிற்சி எடுத்து பாலச்சந்தர் மூலமாக அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். துவக்கத்தில் கமலுடன் இணைந்து மட்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கி ஆக்‌ஷன் ரூட்டை பிடித்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். கமலுடன் இணைந்து நடித்த ரஜினி சம்பளத்திலும், மார்க்கெட்டிலும் அவரை தாண்டி சென்றார். இப்போது 72 வயதிலும் ஜெயிலர் படம் மூலம் சூப்பர் ஹிட்டை கொடுத்து அசத்தியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…

இப்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியுள்ளது. இந்த படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ரஜினிக்கும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே நல்ல நட்பும், உறவும் இருந்தது. ரஜினி மிகவும் மதிக்கும் அரசியல்வாதியாக கலைஞர் இருந்தார். சில தேர்தல்களில் அவருக்கு தனது ஆதரவையும் ரஜினி கொடுத்தார். அடிக்கடி அவரை ரஜினி சந்தித்து பேசியதும் உண்டு.

1980ம் வருடம் ரஜினி நடிக்கும் ஒரு படத்திற்கு கலைஞர் வசனம் எழுதுவதாக இருந்தது. ஆனால், ‘கலைஞரின் வசனத்தை பேசி நம்மால் நடிக்க முடியுமா? என யோசித்த ரஜினி கலைஞரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசியிருக்கிறார். ரஜினியின் தயக்கத்தை புரிந்து கொண்ட கலைஞர் தயாரிப்பாளரை அழைத்து ‘இப்படத்தில் வசனம் எழுத எனக்கு நேரமில்லை’ என வேறு காரணத்தை சொல்லி சமாளித்து விட்டாராம்.

அதேநேரம், கலைஞரின் வசனத்தை பேசி நடிக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் ரஜினிக்கு இப்போதும் மனதிற்குள் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

Published by
சிவா