பொட்டியை தொலைச்சுட்டு துண்டோட நின்ன ரஜினி!.. ஸ்டார் ஹோட்டலில் நடந்த களேபரம்!.. கைகொடுத்த கேப்டன்!..
80களில் தமிழ் சினிமாவில் ஆண்டவர்களில் ரஜினிக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ அதே அளவுக்கு விஜயகாந்திற்கும் இருக்கிறது. விஜயகாந்திற்கு முன்பே சினிமாவில் ரஜினி தன் பங்களிப்பை அளித்திருந்தாலும் விஜயகாந்தின் வரவு சினிமாவை ஒரு புரட்டு போட்டு விட்டது.
ரஜினி கமல் என இருவருமே ஜொலித்துக் கொண்டிருந்த நேரத்தில் விஜயகாந்த் என்னும் ஒரு நடிகன் ஆட்சியை பிடிக்க வந்தார். மூவேந்தர்களாக சினிமாவில் ஓங்க ஆரம்பித்தனர். இப்படி படிபடியாக வளர்ந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று நல்ல முறையில் சங்கத்தை நிர்வகித்து வந்தார்.
வெளி நாடுகளில் கலைவிழாக்களை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்தார் கேப்டன். அப்படி ஒரு சமயம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஸ்டார் நைட் என்ற பெயரில் விழாவை நடத்தினார்கள். அந்த நேரத்தில் கிட்டத்தட்ட 260 நட்சத்திரங்களை ஒன்று திரட்டி விமானத்தில் புறப்பட்டு மலேசியா சென்றது தமிழ் சினிமா.
இதையும் படிங்க : தலைவரிடமே ஆட்டம் காண்பித்த ஸ்ரீதர்!.. விருந்தும் கொடுத்து சவால் விட்ட எம்ஜிஆர்!..
அங்கு முடிந்து மறு நாளே சிங்கப்பூரில் கலைவிழாவை நடத்த கிட்டத்தட்ட 6 பேருந்துகள் மற்றும் விமானங்கள் மூலம் படைதிரட்டி கூட்டி சென்றார் விஜயகாந்த். ஆனால் பேருந்தில் பயணம் செய்யமாட்டோம் என்று சில பேர் சொல்ல ரஜினி முதல் ஆளாக உட்கார அதன் பின் ரஜினியே பேருந்தில் சிங்கப்பூர் போகிறார் என்று மீதமுள்ள அனைவரும் பேருந்தில் சென்றனர்.
போகிற வழியில் ரஜினி 6 பேருந்துகளிலும் மாறி மாறி ஜாலியாக பேசிக் கொண்டு வந்திருக்கிறார். காலையில் சிங்கப்பூர் இறங்கினதும் ஹோட்டலில் இளைப்பாறி மாலையில் விழாவிற்கு தயாராகி கொண்டிருக்க ஒருவர் மட்டும் ஹோட்டல் ஹாலுக்குள் துண்டோடு நடமாடிக்கொண்டிருந்தாராம். அவர் வேறு யாருமில்லை . நம்ம தலைவர் ரஜினி. ஏனெனில் 6 பஸ் மாறி ஏறுனதில் அவர் கொண்டு வந்த சூட்கேஸை எந்த பேருந்தில் தவற விட்டோம் என்று மறந்துவிட்டாராம்.
இதை பார்த்த தயாரிப்பாளர் காஜா மைதீன் வேற டிரஸ் ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்க அதற்கு ரஜினி இல்ல, இல்ல விஜி வேட்டி சட்டை சரியாக இருக்கும் என கூறி விஜயகாந்திடம் புது வேட்டி சட்டை இருந்ததாம். அதை தான் அந்த கலைவிழா சமயத்தில் அணிந்திருக்கிறார் ரஜினி. அந்த வீடியோவை இப்ப கூட பார்த்தால் ரஜினியின் ஆடை தொழ தொழ என்று தான் இருக்கும் என இந்த பதிவை கூறிய தயாரிப்பாளர் காஜா மைதீன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.