நடிகர் ரஜினிக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். அவரின் படங்களில் ஆண்டவனே தன்னை வழி நடத்துவதாக தொடர்ந்து வசனம் பேசுபவர். ஆண்டவன் சொல்றான்.. அருணாச்சலம் முடிக்கிறான்.. போடா ஆண்டவனே நம் பக்கம்.. மேல ஒருத்தன் இருக்கான்.. என பல வசனங்களை பேசியிருக்கிறார்.
90களில் ஸ்ரீராகவேந்திரா சாமி மீது பக்தியுடன் இருந்தார். ஸ்ரீராகவேந்திராவின் சுயசரிதையிலும் நடித்தார். அதுவே அவரின் 100வது படமாக வெளிவந்தது. அதன்பின்னர் ஒரு கட்டத்தில் பாபா சாமியின் பக்தனாக மாறினார். ஆன்மீகப்படி பாபா என்பவர் இமயமலையில் இருப்பவர்.
எனவே. பல வருடங்களாகவே இமயமலைக்கு சென்று டிரக்கிங் செல்வது, பாபா குகையில் தியானம் செய்வது என தொடர்ந்து செய்து வருகிறார். பாபா என்கிற தலைப்பில் படமெடுத்தார். பாபா தனக்கு சில மந்திரங்களை சொல்லித்தருவது போலவும், ரஜினி அதை எப்படி பயன்படுத்துகிறார் என்பதையும் வைத்து கதை பண்னியிருந்தனர்.
இதையும் படிங்க: அதுக்குள்ள ஓடிடி ரிலீஸா?.. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் எந்த ஓடிடியில், எப்போ ரிலீஸாகுது தெரியுமா?..
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 வருடங்களாக ரஜினி இமயமலை பக்கம் செல்லவில்லை. தற்போது ஜெயிலர் பட ரிலீஸுக்கு முதல்நாள் இமயமலை கிளம்பி சென்றார். அவருடன் சில நண்பர்களும் சென்றுள்ளனர். அதன்பின் அங்கு சாமியார்களை அவர் சந்தித்து பேசும் புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில், மலையில் அவர் டிரக்கிங் செல்லு புகைப்படங்களும், குகைகளில் தியானம் செய்யும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அசராமல் அடிக்கும் ஜெயிலர்!.. வெறித்தனமான வசூல்!.. 5 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?!..
நடிகை நயன்தாரா…
Kamal: ரசிகர்கள்…
Biggboss Tamil:தமிழ்…
2017 மே…
விவாகரத்துக்கு பிறகு…