Connect with us

Cinema News

அதுக்குள்ள ஓடிடி ரிலீஸா?.. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் எந்த ஓடிடியில், எப்போ ரிலீஸாகுது தெரியுமா?..

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெறும் 6 நாட்களிலேயே 400 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வரும் நிலையில், அதிரடியாக அந்த படம் ஓடிடியில் விரைவில் வெளியாகப் போவதாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக சிறிய படங்கள் தான் வெளியான 4 வாரத்திலேயே ஓடிடியில் வெளியாகும் நிலை இருந்து வரும் சூழலில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமே 4 வாரத்தில் ஓடிடியில் வெளியாகப் போகிறதாம்.

இதையும் படிங்க: யாரு லேடி சூப்பர்ஸ்டாருன்னு பார்த்துடுவோம்!.. நயன்தாரா படத்துடன் கிளாஷ் விடும் அனுஷ்கா!..

4 வாரத்திலேயே ஓடிடி ரிலீஸ்:

அசோக் செல்வன், சரத்குமார் நடித்து வெளியான போர் தொழில் திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், ஒரு மாதத்தில் ஓடிடியில் வெளியாகாமல் 2 மாதங்கள் கழித்து சமீபத்தில் தான் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி ஓடிடி ரசிகர்கள் பார்வைக்கு கிடைத்தது.

ஆனால், சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் 4 வாரத்திலேயே அமேசான் பிரைம் ஓடிடியில் அதிரடியாக வெளியாகி விட்டது. பெரும் தொகைக்கு ஓடிடி நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி வரும் சூழலில் சீக்கிரம் போட்டால் தான் நாங்களும் சம்பாதிக்க முடியும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதையும் படிங்க: லியோ கதை!.. அர்ஜுனின் என்ட்ரி இடைவேளையில் தானா!.. இதில் டீகோடிங் செய்ய இத்தனை விஷயம் இருக்கா?..

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி:

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்திலேயே 400 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், ஒரு மாத காலத்தையும் தாண்டி படம் சிறப்பாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், வரும் செப்டம்பர் 7ம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ஒரு மாத காலம் கூட இல்லாமல் வெறும் 28 நாட்களில் சரியாக 4 வார கணக்கில் ஓடிடியில் வெளியாகப் போகிறதாம். விரைவில் நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.

இதையும் படிங்க: ரஜினியின் நோக்கமே இதுதான்! ஜெய்லர் படத்தில் இத்தனை மாற்றம் செய்ததன் ஒரே பின்னணி! அப்டி போடு!

google news
Continue Reading

More in Cinema News

To Top