Connect with us

Cinema News

யாரு லேடி சூப்பர்ஸ்டாருன்னு பார்த்துடுவோம்!.. நயன்தாரா படத்துடன் கிளாஷ் விடும் அனுஷ்கா!..

அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி, பாகமதி என தென்னிந்திய ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தனது கன்ட்ரோலில் வைத்திருந்த அனுஷ்கா உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அதை குறைக்க முடியாமல் போராடிய நிலையில், பல படங்களை இழந்து தனது மார்க்கெட்டையே தொலைத்து விட்டார்.

ஆனால், எப்போ வந்தாலும், தனது மார்க்கெட்டை திரும்ப கொண்டு வர முடியும் என்கிற வைராக்கியத்துடன் தற்போது தனது புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள அனுஷ்கா நடிகை நயன்தாராவுடனே பெரிய போட்டிக்கும் தயாராகி விட்டது தான் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஹெவி வெயிட் போட்ட அனுஷ்கா: 

ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க தனது உடல் எடையை இஷ்டத்துக்கு ஏற்றி விட்டார் நடிகை அனுஷ்கா. யோகா டீச்சர் என்பதால், உடனடியாக உடல் எடையை குறைத்து விடலாம் என அவர் போட்ட கணக்கு கடைசியில் மிஸ் ஆக அவரது உடல் மேலும், பெருத்துப் போய் விட்டது.

வொர்க்கவுட், உடல் எடைக் குறைப்பு சிகிச்சை, மூலிகை வைத்தியம் என பல விஷயங்களை செய்து பல ஆண்டுகள் கழித்து தற்போது ஓரளவுக்கு எடை குறைந்த நிலையில், Miss Shetty Mr Polishetty படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகருடன் காதல், கல்யாணம் , அபார்ஷன்! பல தடைகளை தாண்டி ‘ஜெய்லர்’ படத்தில் கெத்து காட்டிய நாயகி

நயன்தாரா படத்துடன் கிளாஷ்:

அனுஷ்காவின் புதிய திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் சமையல் கலை நிபுணராக நடித்துள்ளார்.

ஆனால், அதே நேரம் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஜவான் படமும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தனது படத்தை தள்ளிப் போடாமல் அதே நேரத்தில் அனுஷ்கா ஒரு காரணத்திற்காகவே வெளியிடுகிறார் என்றும் தென்னிந்தியாவில் நயன்தாராவுக்காக ஜவான் ஓடுகிறதா? அல்லது அனுஷ்கா ஷெட்டி படம் வசூல் குவிக்க போகிறதா என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களே ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சீக்கிரம் அந்த 420+ கோடி வடையை இறக்குங்கப்பா!.. ஜெயிலரை டோட்டல் டேமேஜ் செய்த புளூ சட்டை மாறன்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top