Connect with us

Cinema News

சீக்கிரம் அந்த 420+ கோடி வடையை இறக்குங்கப்பா!.. ஜெயிலரை டோட்டல் டேமேஜ் செய்த புளூ சட்டை மாறன்!..

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வசூலை ஜீரணிக்க முடியாமல் தான் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா என கதைக்கு தேவையே இல்லாத ஆட்களை தேடிப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டு பான் இந்தியா பருப்பு வடையாக இந்த படத்தை ரஜினிகாந்த் உருவாக்கி உள்ளார் என புளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்து வெற்றிப் பெற்ற நிலையில், அவர் மட்டும் தான் தனக்குப் போட்டி என ஜெயிலர் படத்தின் மூலம் அவரை பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறணும் என வசூல் வடையை சுட்டுக் கொண்டே இருக்கின்றனர் என வறுத்தெடுத்துள்ளார்.

400 கோடி வசூல்:

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சுதந்திர தின வசூலுடன் சேர்த்து 450 கோடி என சில டிவி சேனல்களும், இதுவரை 400 கோடி வசூல் என சில மீடியாக்களும் தகவல்களை வெளியிட்டுள்ளன.

ஆனால், பல கோடி போட்டு படத்தை தயாரிப்பு சன் பிக்சர்ஸ் அதிகமாக சொன்னால், அதிக வரி செலுத்த வேண்டுமே என்பதால், அடக்கி வாசித்து மெளன விரதத்தில் உள்ளதாக பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் வராமல் மற்ற டிராக்கர்கள் சொல்வது எல்லாமே வடை தான் என தொடர்ந்து புளூ சட்டை மாறன் ஜெயிலர் படத்தை விடாத கருப்பாக விரட்டி அடித்து வருகிறார்.

விக்ரம், பொன்னியின் செல்வனை தாண்டணும்:

ஏற்கனவே மனோபாலா பதிவிட்ட 350 கோடி வசூல் ட்வீட்டுக்கு கீழே வடை மெஷின் கமெண்ட் போட்டு சண்டையை ஆரம்பித்து வைத்த ப்ளூ சட்டை மாறன் தற்போது ”சீக்கிரம் அந்த 420+ கோடி வடையை இறக்குங்கப்பா. விக்ரமை வீழ்த்திட்டு நாளைக்கி, 500 crore பொன்னியின் செல்வனை தாண்டனும்.” என ட்வீட் போட்டு ஜெயிலர் படத்தை டோட்டல் டேமேஜ் செய்து வருகிறார்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூல் குறித்து கமலே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விருந்தெல்லாம் போட்டார். அதே போல ஜெயிலர் படத்தின் 500 கோடி வசூலுக்கு லைகா நிறுவனம் போஸ்டரே அடித்து வெளியிட்டது. ஆனால், இன்னமும் சன் பிக்சர்ஸ் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது என புளூ சட்டை மாறன் டார்கெட் செய்து காலி பண்ணி உள்ளார்.

https://twitter.com/tamiltalkies/status/1691373756630073344/photo/1

 

google news
Continue Reading

More in Cinema News

To Top