Musician Deva: தேவா தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர் தமிழில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் இவருக்கு வெற்றியை தேடி தந்துள்ளன. எந்த வித இசை பின்புலமும் இல்லாத இவர் நடித்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் தனது சொந்த முயற்சியினாலேயே சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார். மேலும் இவரின் பாடல்களும் ரசிகர்களை கவரும்படி இருந்தது. இவர் மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை தேனிசை தென்றல் தேவா எனவும் அழைப்பர்.
இதையும் வாசிங்க:நயனுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்… அடுத்த பட சம்பளம் இவ்வளவோ?
கிராமத்து பாணியில் இருக்கும் இவரின் பாடல்கள் மக்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டது. ஆசை, பாட்ஷா, நேருக்கு நேர் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் வாலி, குஷி போன்ற திரைப்படங்களில் இசையமைத்ததற்காக இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாமலை திரைப்படத்திற்கு இவர்தான் இசையமைத்திருந்தார். அந்த காலத்தில் இசையமைப்பாளர் என்றால் இளையராஜாதான் புகழ் பெற்றாவராக இருந்தார். அண்ணாமலை படம் உருவானபோது ஒருநாள் ரஜினி ‘இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர்?’ என கேட்டுள்ளார். அப்போது இயக்குனர் தேவாவின் பெயரை கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க:லியோ வசூல் கணக்கு எல்லாமே பொய்!.. சொன்னா மிரட்டுறாங்க!.. அடுத்த குண்டை வீசிய திருப்பூர் சுப்ரமணியன்…
ஆனால் அந்த காலகட்டத்தில் ரஜினி மிகவும் பிரபலமானவர். அவர் இளையராஜாவிடம் தனது படத்திற்கு இசையமைத்து தரும்படி கேட்டிருந்தால் இளையராஜா மற்ற படங்களை காட்டிலும் ரஜினியின் படத்திற்குதான் முன்னுரிமை கொடுத்திருப்பார். ஆனால் இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது தேவாதான் என கூறியதை முதலில் ரஜினியோ ஏற்று கொள்ளவில்லையாம்.
அதற்கு பதிலாக ‘எதற்காக அவர் இசையமைக்க வேண்டும்?’ என்றுதான் கேட்டாராம். மேலும் அவர் தேவாவின் இசையின் மீது சந்தேகத்தில் இருந்துள்ளார். அப்போது அப்படத்தின் இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தில் வந்த வந்தேண்டா பால்காரன்.. பாடலுக்கு தேவாவை இசையமைக்க சொல்லி அதை ரெக்கார்ட் செய்து ரஜினியிடம் போட்டு காட்டியுள்ளார். அதனை கேட்டதும் ரஜினி தன் கையில் வைத்திருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு சபாஷ் என கூறினாராம். என்ன ஒரு அற்புதமான திறமை என தேவாவை புகழ்ந்துள்ளார். மேலும் அண்ணாமலை திரைப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
இதையும் வாசிங்க:அஜித் படத்துக்காக அனுஷ்காவா மாறும் திரிஷா!. ஐயோ பாவம்!.. இதெல்லாம் தேவையா?!.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…