Vekat Butt: விஜய் டிவி மக்களை கவர்வதற்காக ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. 3 சீசன்களை கடந்து இப்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குக் என்ற வகையில் சில பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொள்ள கோமாளிகளாக விஜய் டிவியில் நகைச்சுவையில் கலக்கி வரும் சில கலைஞர்கள் கோமாளியாக கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசனாக ரக்சன் தொகுத்து வழங்கி வந்தார். இப்போது அவரும் சேர்ந்து மணிமேகலையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மூன்று சீஷன்கள் வரைக்கும் செஃப் வெங்கட் பட் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் தான் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த தீர்ப்பை தந்து வந்தனர்.
இதையும் படிங்க: சம்மர் சூட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற கோமாளி பட நடிகை!.. டூபீஸ் உடையில் ஃபுல் மீல்ஸ் கன்ஃபார்ம்!..
இந்த நிலையில் இந்த நான்காவது சீசனில் வெங்கட் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருக்கிறார். வெங்கட் பட் சன் டிவியில் இதே மாதிரியான ஒரு சமையல் நிகழ்ச்சியில் நடுவராக சென்று இருக்கிறார். ஆனால் விஜய் டிவிக்கும் வெங்கட் பட்டுக்கும் இடையே ஏதோ ஒருவித கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் என்ற ஒரு தகவல் இணையத்தில் வைரலானது.
ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் வெங்கட் பட்டை தமிழகம் எங்கும் பிரபலமாக்கியது. இந்த நிலையில் அவர் திடீரென ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆரம்பத்தில் சோழா ஹோட்டலில் சாதாரண ஒரு ஊழியராகத்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். ஒரு சமயம் சாப்பிட்ட தட்டுகளை கழுவிக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென ரஜினி ஒரு நாள் வந்தாராம். அப்போது வெங்கட் பட்டை பார்த்த ரஜினி நீ ஒரு நாள் பெரிய ஆளாக வருவாய் என கூறிவிட்டு சென்றாராம். அவர் எந்த நேரத்தில் சொன்னார் என தெரியவில்லை. அவர் ஒரு தெய்வ கடாட்சம். இப்போது நான் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன் என வெங்கட் பட் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரூட்டை பிடிக்கும் கவின்!.. அடுத்த படத்துல அந்த ஆன்ட்டி ஹீரோயினுக்கு கொக்கி?..
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…