எனக்கு பணம் அனுப்ப வேணாம்!.. ராகாவா லாரன்ஸ் போட்ட வீடியோ பின்னால் இருப்பது ரஜினியா?!..
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொண்டு ஒரு தனி டிராக்கில் போய்க் கொண்டிருக்கும் நடிகர் லாரன்ஸ். ரசிகர்கள் மத்தியில் லாரன்ஸுக்கு என்று மிகப்பெரிய மரியாதையே இருக்கிறது. அவர் செய்யும் பல நல்ல செயல்கள் மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஒரு குரூப் டான்சராக , மாஸ்டராக, தற்போது நடிகராக என படிப்படியாக தன்னுடைய உயரத்தை அடைந்து வருகிறார் லாரன்ஸ். சூப்பர் சுப்பராயனிடம் ஒரு டீ பாயாகத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் லாரன்ஸ். அப்போது படப்பிடிப்பிற்கு வந்த ரஜினி லாரன்ஸை பார்த்து யார் என கேட்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எப்படியாவது இவருக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள் என லாரன்ஸிற்காக சூப்பர் சுப்பராயன் பேசினாராம்.
இதையும் படிங்க : காருக்குள்ளேயே கதற கதற!.. டிரைவருடன் சீரியல் நடிகை பண்ண வேலை!.. ஈசிஆரில் சம்பவம்!..
உடனே மறுநாள் ரஜினி லாரன்ஸை வீட்டுக்கு வரச் சொல்லி பிரபுதேவாவிடம் உதவியாளராக சேர்க்க வைத்திருக்கிறார். அதன் மூலம் ஜெண்டில்மேல் படத்தில் அமைந்த சிக்கு புக்கு ரயிலே பாடலில் ஒரு குரூப் டான்சராக ஆடியிருப்பார் லாரன்ஸ். இப்படி தொடர்ந்து தன் திறமையை வளர்த்துக் கொண்ட லாரன்ஸ் அற்புதம் என்ற படத்தில் நடித்தார்.
ஆனால் படம் ஓடவில்லை. அதன் பின் முனி என்ற படத்தில் நடித்திருந்தாலும் அந்தப் படத்தில் சில பல குறைகள் இருக்க அதை காஞ்சனா படத்தில் சரிசெய்து ஒரு மாஸ் நடிகராக மக்கள் முன் தோன்றினார் லாரன்ஸ். ஆரம்பத்தில் இருந்தே லாரன்ஸுக்கு இல்லாத குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.
டான்சராக இருக்கும் போது போதுமான வருமானம் இல்லாததால் பிரபலங்கள் சில பேரிடம் நன்கொடையாக பெற்றுக் கொண்டே அந்த குழந்தைகளுக்கு உதவி செய்திருக்கிறார். அதன்பின் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு யாரிடமும் உதவியை எதிர்பார்க்காமல் அவர் சொந்த பணத்திலேயே இப்போது கவனித்துக் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : சென்னையில் ஜவான் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி!.. அட நம்ம தளபதி என்ட்ரியும் கன்ஃபார்ம்!.. குட்டி கதை?..
அதுமட்டுமில்லாமல் நேற்று அவர் வீடியோ ஒன்று வைரலானது. அதில் இனிமேல் எனக்கு பணம் யாரும் அனுப்ப வேண்டாம் என்றும் இதை பணம் இருக்கிற அகங்காரத்தில் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றும் இப்போது நான் வருடத்திற்கு மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதால் அதன் மூலம் வரும் பணத்தில் என்னுடைய டிரஸ்டை பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த வீடியோ பதிவிற்கு பின்னால் இருந்தது ரஜினிதானாம். அதாவது ஒரு நாள் ரஜினி லாரன்ஸை அழைத்து வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடிப்பதற்கு பதிலாக வருடத்திற்கு மூன்று படங்களில் நடித்தால் ஒரு பெரும் தொகை கிடைக்கும். அதன் மூலம் டிரஸ்டை இன்னும் சிறப்பாக வழி நடத்தலாம் அல்லவா? என்ற யோசனையை கூறினாராம். அதன் பிறகே அந்த முடிவை எடுத்திருப்பதாக லாரன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.