ரஜினி கமல் விஷயத்தில் இதுதான் நடக்கும்!.. பந்தயம் கட்டி சவால் விட்ட பிரபல இயக்குனர்...

by Rohini |
kamal
X

kamal rajini

80களில் ஆரம்பித்த தன் வெற்றிப் பயணத்தை 2000 ஆண்டை தாண்டியும் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியும் கமலும். 80களில் எப்படி ஒரு முடி சூடா மன்னர்களாக இருந்தார்களோ அதற்கும் மேலாக அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இன்னமும் டஃப் கொடுத்து வருகிறார்கள்.

kamal1

kamal rajini

அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் மற்றும் பல நடிகர்கள் இன்று வரை அவர்களின் ரெக்கார்டை தகர்த்தெறிய முடியவில்லையே.அந்த அளவுக்கு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் படங்கள் தான் தமிழ் சினிமாவிற்கே ஒரு பாக்ஸ் ஆஃபிஸ் படங்களாக திகழ்ந்து வருகின்றன.

தாங்கள் எப்படி சினிமாவை ஆளப்போகிறோம் என்று அவர்களின் பாட்டின் மூலமே அறியலாம். ரஜினிக்கு எப்படி அவரின் பாட்டான ‘இன்று இல்லை நாளை இல்லை எப்பவுமே ராஜா’ என்பதற்கேற்ப கமலுக்கும் ‘நாயகன் மீண்டும் வரார்’ என்ற பாடல் அவர்களின் பெருமையை உணர்த்தும் பாடலாகவெ உண்மையிலேயே அமைந்து விட்டன.

kamal2

kamal rajini

ஆனால் சினிமாவில் ரஜினிக்கு சீனியர் கமல். ரஜினி சினிமாவில் அறிமுகம் ஆனபோதே கமல் ஒரு உச்சம் தொட்ட நடிகராகவே வளர்ந்திருக்கிறார். அவரை பார்த்து ரஜினி ஒரு கட்டத்தில் பதறியதும் உண்டு. ஆளு அழகாக இருக்காரே, டான்ஸும் நன்றாகவே ஆடுகிறாரே, இப்படி ஒருவர் இருக்கும் சினிமாவில் நாம் நிலைத்து நிற்க முடியுமா என்றெல்லாம் ரஜினி யோசித்ததுண்டு.

வில்லனாக அறிமுகமான ரஜினி பைரவி படத்தின் மூலம் முதன் முதலாக கதாநாயகனாகிறார் . அந்தப் படத்தில் நடித்ததன் மூலமாகவே சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் ரஜினி. ஏனெனில் அந்தப் படம் தான் அவரின் முழு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது. அவர்கள் இணைந்து நடித்த படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படம் விளங்கியது.

kamal3

rajini sridhar

அந்தப் படத்தை ஸ்ரீதர் தான் இயக்கியிருந்தார். அந்தப் படத்தை பார்த்து ஒரு தயாரிப்பாளர் ஸ்ரீதரிடம் ‘யார்ய்ய்யா அந்த பையன், என்னம்மா டான்ஸ் ஆடுறான்? சார்மிங்காகவும் இருக்கான், சினிமாவில் ஒரு கலக்கு கலக்கப் போகிறான்’ என்று கமலை பார்த்து பாராட்டிக் கொண்டிருந்தாராம். ஆனால் அந்தப் படத்தின் ஒரு சீனில் ரஜினி தன் சட்டையை காட்டி தனது ஸ்டைல் மூலம் கமலுக்கு தன் திமிரு தனத்தை காட்டியிருப்பார். அதை பார்த்து ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கின்றனர் திரையரங்கில்.

இதையும் படிங்க : ஜெயலலிதா நடிக்க இருந்த ஆக்‌ஷன் படம்!.. ஹீரோ யாருனு தெரியுமா?.. ஆனால் பேர் வாங்கியதோ வேறொரு நடிகை..

அப்போது ஸ்ரீதர் அந்த தயாரிப்பாளரிடம் ‘இன்றைக்கு சொல்கிறேன் கேட்டுக்கோ..கமலை விட ரஜினி உயர்ந்த அந்தஸ்துக்கு போகப்போகிறார், நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், கண்டிப்பாக அது நடக்கும், இன்னும் 5 வருடம் கழித்து ரஜினியின் இடமே வேறு, 100 ரூபாய் பந்தயம்’ என்று சொன்னாராம். அவர் சொன்ன வார்த்தை இன்று 100 மடங்காக பலித்திருக்கிறது என்று அந்த தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறினார். அந்த தயாரிப்பாளர் வேறு யாருமில்லை. அஜித்தின் பில்லா படத்தை தயாரித்த ஆனந்தா எல்.சுரேஷ் தான்.

Next Story