எம்.ஜி.ஆருக்கு அடுத்து ரஜினிதான்!.. சத்தியராஜே பாராட்டிய அந்த விஷயம்.. அட செம மேட்டரு!...

by சிவா |
mgr rajini
X

நடிகர் சத்தியராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது திரைப்படங்களை பார்த்துதான் நடிகராகும் ஆசையே அவருக்கு வந்தது. ஆனால், சினிமாவில் நுழைந்து பல வருடங்கள் அடியாள் கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். ரஜினி பெரிய ஹீரோவாக இருந்த போது ‘யெஸ் பாஸ்’ என ஒரு வசனம் மட்டும் பேசும் நடிகராக இருந்தவர்தான் சத்தியராஜ்.

ஒருபக்கம், சில காரணங்களால் சத்தியராஜுக்கு ரஜினியை பிடிக்காது. நாமெல்லாம் பராசக்தி வசனங்களை மனப்பாடம் செய்து வாய்ப்பு கேட்டு சினிமாவில் நுழைந்தால் ரஜினி வெறும் ஸ்டைலை வைத்தே சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி ஆதங்கப்படுவாராம்.

இதையும் படிங்க: பாகுபலியை போட்டு பொளக்க ரெடியாகிட்டாரா சூர்யா!.. கங்குவா படத்துல இவ்ளோ விஷயம் இருக்கா!..

80களில் சில படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ரஜினி படங்களில் நடிப்பதை சத்தியராஜ் நிறுத்திவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க சிவாஜி படம் உருவானபோது கூட அதில் வில்லனாக நடிக்க சத்தியராஜை கேட்டார்கள். ‘நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா?’ என கோபமாக கேட்டுவிட்டு அந்த படத்தில் நடிக்க மறுத்தார் சத்தியராஜ்.

சில பொது மேடைகளிலும் ரஜினியை கடுமையாக விமர்சித்தார். சுருக்கமாக சொன்னால் ரஜினி மீது சத்தியராஜுக்கு வன்மமும், கோபமும் நிறையவே இருந்தது. ஆனால், சமீபகாலமாக அது குறைந்திருப்பது போல தெரிகிறது. விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்கிற பிரச்சனை ஓடியபோது ‘பொன்மன செம்மல் என்றால் அது எம்.ஜி.ஆர்தான்.. நடிகர் திலகம் எனில் அது சிவாஜிதான். அதுபோல சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான்.. விஜய்க்கு தளபதி என்கிற பட்டம் இருக்கிறது. அதுவே போதும்’ என சொன்னவர் சத்தியராஜ்.

அதேபோல், தற்போது மற்றொரு சினிமா விழாவில் பேசிய சத்தியராஜ் ‘பெண் பெயரை தலைப்பாக கொண்டு ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர் மட்டுமே பெரிய ஹீரோவாக இருக்கும்போதே அடிமைப்பெண் என தலைப்பு வைத்து நடித்தார். அதன்பின், ரஜினி மட்டுமே சூப்பர்ஸ்டாராக இருந்தும் ‘சந்திரமுகி’ என தலைப்பு வைத்த படத்தில் நடித்தார்’ என பேசியிருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி கமல் ஜெயிக்கிறதுக்கு இதுதான் காரணம்!. நான்தான் கோட்டை விட்டேன்!. காலம்போன காலத்தில் புலம்பும் சத்தியராஜ்!…

Next Story