விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல், அமிதாப்பச்சன் - அட நம்பவே முடியலயே!

by சிவா |   ( Updated:2023-05-13 05:59:11  )
vijayakanth
X

திரையுலகில் ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் அந்த படத்தின் கதை தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளுக்கும் செல்லும். அதாவது வேறு மொழி நடிகர்கள் அந்த கதையில் ஹீரோவாக நடித்து அந்த மாநிலங்களில் வெளியாகும். இப்படி பல ஹிந்தி படங்களின் கதையில் ரஜினி, கமல் நடித்துள்ளனர். ஏன் எம்.ஜி.ஆர், சிவாஜியே அப்படி நடித்துள்ளனர். அதேபோல், பல ஹாலிவுட் படங்களின் கதையை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி எம்.ஜி.ஆரே பல படங்களில் நடித்துள்ளார்.

sattam

அதேபோல் விஜயகாந்தின் ஹிட் படத்தின் கதையில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?... ஆனால், உண்மையில் அது நடந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த திரைப்படம்தான் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படம் மூலமாகத்தான் விஜயகாந்த் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Andhaa Kaanoon (1983) - IMDb

இந்த படம் 1981ம் வருடம் வெளியானது. இந்த படம் ஹிந்தியில் அந்த கானூன் என்கிற பெயரில் 1983ம் வருடம் வெளியானது. இந்த படம் மூலம்தான் ரஜினி பாலிவுட்டில் அறிமுகமானார். அமிதாப்பச்சன் இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இந்த படம் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்ட போது அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர்லால் என பலரும் அதே வேடத்தில் நடித்திருந்தனர்.

விஜயகாந்த் நடித்த படத்தின் கதை அனைத்து மொழிகளிலும் இத்தனை ஹீரோக்கள் நடித்தது இதுதான் முதலும் கடைசியுமாகும்.

Next Story