இப்பவும் உதவாத உச்ச நட்சத்திரங்கள்!.. இவங்களுக்கு பாலாவே பல படி மேல்!..

by சிவா |
rajni
X

பொதுவாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புயல், கடும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிட நிகழ்வு நடந்து அதிக பொருட்செலவு ஆகும்போது திரையுலகில் நூறு கோடி வரை சம்பளம் பெறும் நடிகர்களும், அவர்களை விட குறைவான சம்பளம் பெறும் நடிகர்களும் அரசுக்கு நிதியுதவி அளிப்பது வழக்கம்.

சமீபத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் அதிக கனமழகை பொழிந்து வேளச்சேரி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியது. பலரின் வீட்டுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. ஏரியை ஒட்டி கட்டப்பட்ட பல அடுக்கமாடி குடியிருப்புகள் நீரால் சூழப்பட்டது. வீட்டிற்கு வெளியேயும், அப்பார்ட்மெண்ட் அடித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், பைக்குகளும் மொத்தமாக சேதமடைந்தது.

water

சாலையோரத்தில் இருந்த பல கடைகளுக்குள்ளும் நீர் புகுந்து பொருட்கள் வீணானது. பொதுமக்களுக்கே பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் மின்சாரம், தண்ணீர், உணவு என எதுவுமே இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் அரசுக்கு நிதி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திரையுலகில் 100 கோடி மற்றும் அதற்கு மேல் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் என யாரும் இதுவரை ஒரு பைசா கூட நிதியாக அளிக்கவில்லை. விஜயின் மக்கள் இயக்கத்தினர் சில பகுதிகளில் உணவு அளித்தார்கள். அதிலும், விஜய் படத்தை கையில் வைத்து சாப்பிடும் எல்லோர் முன்பும் காட்டி காமெடி செய்தனர்.

vijay

2018ம் வருடம் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது கமல்ஹாசன் கேரள அரசுக்கு ரூ.25 லட்சம் நிதியாக கொடுத்தார். ஆனால், இந்தமுறை நிதியாக எதுவும் கொடுக்கவில்லை. ரஜினியும், அஜித்தும் லிஸ்ட்டிலேயே இல்லை. விஜய் டிவி பாலா ஒரு வீட்டிக்கு ஆயிரம் ரூபாய் என 5 லட்சம் வரை மக்களிடம் கொடுத்தார். அறந்தாங்கி நிஷாவும் தன்னிடம் இருந்த பணத்தில் பலருக்கும் உணவளித்தார்.

சின்ன சின்ன நடிகர்களே பல உதவிகளையும், நிதி உதவியையும் கொடுத்த போது ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இதை கண்டுகொள்ளாமல் கடந்துபோனது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

Next Story