Connect with us
rajini

Cinema News

ரஜினி மாதிரியே இருக்கிறதால நான் பட்ட கஷ்டம்! வேதனையை பகிர்ந்த நடிகர்

ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரு நடிகர்கள் இருந்தால் சினிமாவில் இருவரும் ஒன்றாக ஜெயிப்பது என்பது முடியாத காரியம். உதாரணமாக சிம்ரனை போலவே அறியப்பட்டார்  நடிகை  மீரா சோப்ரா. ஆனால் அவரால் தமிழில் தாக்கு பிடிக்க முடியவில்லை. இப்படி சினிமாவில் ஒன்று போல் இருப்பது ஒருவருக்கு லாபத்தையும் ஒருவருக்கு நஷ்டத்தையும் தான் கொடுக்கும். அந்த வகையில் ரஜினியை போல் இருந்ததனால் பெருமளவு நஷ்டம்தான் என கூறியிருக்கிறார் ஒரு நடிகர்.

rajini1

rajini1

அவர்தான் நளினி காந்த். தமிழ், மலையாளம் என கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பரீட்சையமானவர். ஆரம்பகாலங்களில் இவரும் ரஜினியும் ஒன்றாக சுற்றியவர்களாம். பாலசந்தர் ரஜினியை அழைத்துக் கொண்டு ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார் என்றும் தெலுங்கு இயக்குனரான தசரி நாராயண ராவ் இவரை தெலுங்கு பக்கம் அழைத்துக் கொண்டு சென்று நளினிகாந்தாவாக மாற்றிவிட்டார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : என்ன இருந்தாலும் மருமகன் இல்லையா? தனுஷுக்காக அந்த விஷயத்தில் மறைமுகமாக உதவிய ரஜினி

பொதுவாக பாக்யராஜின் சூப்பர் ஹிட் படங்களில் பெரும்பாலான முக்கியமான கதாபாத்திரங்களில் நளினிகாந்த் தான் நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் வில்லனாகவும் ஒரு சில படங்களில் நடித்தார். அதனாலேயே பாக்யராஜ் மீது அதிக அன்பு கொண்டவராக இன்று வரை நளினி காந்த் இருக்கிறார்.

rajini2

rajini2

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினியை பற்றி ஏராளமான கேள்விகள் நளினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதாவது அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்ததும் உங்கள் லாபம் இருந்ததா? அல்லது நஷ்டமடைந்தீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் கண்டிப்பாக நஷ்டம்தான் என்று சொன்னார். லாபம் அடைந்திருந்தால் அவரை விட பெரிய புகழை அடைந்திருப்பேனே! என்று கூறினார்.

மேலும் பல பேர் குறிப்பாக டி.எம்.எஸ் மற்றும் வாணி ஜெயராம் என்னை ரஜினி என்றே நினைத்து உடல் நிலை விசாரித்திருக்கிறார்கள் என்றும் கூறினார். அந்த காலத்தில் அப்படியே நானும் ரஜினியும் ஒரே மாதிரிதான் இருப்போம் என்றும் ஒன்றாகத்தான் சுற்றினோம் என்றும் கூறினார். இப்போது பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நளினிகாந்த் பல சீரியல்களை தயாரித்துக் கொண்டும் இருக்கிறாராம்.

இதையும் படிங்க : ‘மாவீரன்’ படத்தில் சர்ப்ரைஸ் கதாபாத்திரம்! இந்த நடிகரா? ஒழிச்சு வச்சு வேடிக்கை பார்த்த படக்குழு

rajini3

rajini3

google news
Continue Reading

More in Cinema News

To Top