தென்னிந்திய சினிமாவே மரியாதை கொடுக்கும் நடிகர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பால் அழைக்கப்படும் ரஜினி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை ஆண்டு வருகிறார்.
தன்னுடைய எதார்த்தமான ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரஜினி. வயது 70 ஐ தொட்டும் இன்னும் அதே புத்துணர்ச்சியுடனும் இளமையுடனும் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் மீது மிகப்பெரிய மரியாதையே வைத்திருக்கும் சினிமா உலகம் ஒரு நடிகை மட்டும் வாடா போடா என்று கூறினாராம்.
இதையும் படிங்க :தாங்க முடியாத அட்டகாசம்!.. நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் கமுக்கமாக வேலையை காட்டிய வடிவேலு!.. பாவம் அந்த நடிகர்!..
அதை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது முன்னதாகவே கூறியிருக்கிறார் ரஜினி. அந்த செய்தி இப்போது வைரலாகி கொண்டு வருகிறது. ரஜினி வீரா மற்றும் உழைப்பாளி போன்ற வெற்றிப்படங்களில் ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ரோஜா.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா அந்த சமயம் தான் சினிமாவிற்குள் வந்திருக்கிறார். நடிக்க வந்த புதிதில் ரோஜாவிற்கு தமிழ் பேசவே தெரியாதாம். அப்போது வீரா பட சூட்டிங் சமயத்தில் ரோஜாவை பேட்டி காண பத்திரிக்கையாளர்கள் வந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க :வாய்ப்பு கொடுத்தும் அடங்கலயே!.. சந்திரமுகி படத்தில் இருந்து விலகுகிறாரா வடிவேலு?…
அப்போது அங்கு இருந்த ரஜினி பத்திரிக்கையாளர்களிடம் இந்த பொண்ணை பேட்டி எடுக்காதீங்கய்யா, அதையும் மீறி பேட்டி எடுத்தால் என் மானத்தை வாங்கிடும் என்று சொல்லியிருக்கிறார். ரஜினி கூறிய விஷயம் பத்திரிக்கையாளர்களுக்கு புரியவில்லையாம்.
அதன் பிறகு தான் அதுக்கு தமிழ் சரியா பேச வராது. நாய்க்கு வாங்க போங்கனு மரியாதை கொடுக்கும், என்னை வாடா போடானு சொல்லும். இது டிவில வந்தால் என் மானம் தான் போகும் என்று பங்கமாய் ரோஜாவை கலாய்த்து தள்ளியிருக்கிறார். இதை கேட்டதும் பத்திரிக்கையாளர்களும் சிரித்துவிட்டனராம். அந்த இடமே சிரிப்பலையில் மிதந்திருக்கிறது.