Connect with us
thalaivar

Cinema News

மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

நடிகர் ரஜினிகாந்துக்கு ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. அதற்கு முன்பு வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படம் அவருக்கு கை கொடுத்ததோடு நல்ல வசூலையும் பெற்று கொடுத்துவிட்டது.

இப்போது அதே உற்சாகத்தில் ரஜினி தனது அடுத்து வேட்டையன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி வருகிறார். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது. ஒருபக்கம், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா உருவாக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் சிறு வீடியோவும் நேற்று வெளியானது.

இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

லால் சலாம் படத்தில் ரஜினி நடித்திருப்பது ஒரு கௌரவ வேடத்தில் மட்டுமே. ஆனாலும், இது ரஜினி படம் போலவே சித்திக்கப்பட்டு வருகிறது. அவரை வைத்தே கல்லா கட்ட முடிவெடுத்த ஐஸ்வர்யா இப்படத்தின் விளம்பரத்திற்கு தொடர்ந்து ரஜினியையே பயன்படுத்தி வருகிறார்.

விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிலையில், லால் சலாம் படத்தின் விழா அங்கு நடைபெறவில்லை. ஒரு கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: ரஜினி, கமல், அமிதாப் இணைந்து நடித்த ஒரே படம்!.. அட அது அந்த படத்தோட ரீமேக்!…

ரஜினி ஹீரோ இல்லை என்பதால் இதில் அவர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை. அதேநேரம், இப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா தனது மகள் என்பதால் படத்தின் புரமோஷனுக்காக ரஜினி கலந்துகொள்வார் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஏற்கவே ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசிய பேச்சுதான் அப்படத்தின் பெரிய வெற்றிக்கே காரணமாக இருந்தது.

எனவே, கண்டிப்பாக லால் சலாம் பட விழாவிலும் ரஜினி கலந்து கொண்டு ஒரு குட்டிக்கதை சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏற்கனவே அவர் சொன்ன பருந்து – காக்கா கதை ஊடகங்களுக்கு தீனி போட்ட நிலையில், இந்த முறை அவர் என்ன கதை சொல்வார் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: சம்பவம் லோடிங்! அடிபட்ட பாம்பு சும்மா விடுமா? வெளியான ‘ரஜினி 171’ படத்தின்புதிய அப்டேட்

google news
Continue Reading

More in Cinema News

To Top