Rajini: இவருக்கு இல்லையாப்பா ஒரு என்ட்? லைன் அப்பில் மாஸ் காட்டும் சூப்பர் ஸ்டார்

ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் எப்போதும் போல வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு ரஜினி அடுத்தடுத்து எந்த எந்த படங்களில் நடிக்க போகிறார் என்பதை பற்றிய ஒரு அப்டேட் வந்திருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவருடைய லைன் அப் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த வயதிலேயும் ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. 75 வயதுள்ள மனிதர் போலவா இருக்கிறார்? வேகமாக நடப்பதும், வேலையில் சுறுசுறுப்பு காட்டுவதும் அடுத்த தலைமுறையினருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தை முடித்ததும் அடுத்து ரஜினி சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் தான் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோ சூட் அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் ஆட்டோபயோகிராஃபிக் வேலைகளும் நடந்து வருகின்றன. அதை எழுதும் முயற்சியிலும் ரஜினி இருக்கிறார். ரஜினி சிபி சக்கரவர்த்தி படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ரஜினியும் கமலும் இணையும் படமும் அடுத்தவருடம் நடக்க இருக்கிறது. அது ரஜினிக்கு 174வது படமாகவும் கமலுக்கு 238 படமாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ரஜினி 175வது படம் குறித்த ஆலோசனைகளும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 2028 வரை ரஜினி ஃபுல் டைட்டில்தான் இருக்க போகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

14 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago