இதெல்லாம் கதையா? விரக்தியில் விலக நினைத்த ரஜினி… ஒரே வார்த்தையில் அடக்கிய இளையராஜா!
Rajinikanth: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்த ரஜினிகாந்த் எல்லா படத்தின் மீது நம்பிக்கையுடன் நடிப்பார். ஆனால் அவரின் ஒரு சூப்பர்ஹிட் படத்தில் இயக்குனர் மீதே நம்பிக்கை இல்லாமல் இளையராஜா போட்ட சபதத்திற்காக நடித்த கதை குறித்த தகவலை அவரின் தம்பி கங்கை அமரன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், எங்களுடைய பாவலர் கிரியேஷன் சார்பில் டாப் ஆக்டர்களின் கால்ஷீட்டினை வாங்க முடியும். ஆனால் நான் அவர்களை வைத்து இயக்காமல் இருந்ததற்கு என் அண்ணனே காரணம்.
இதையும் படிங்க:இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!
ஒரு முறை இருவரையும் வைத்து தனித்தனியாக ஒரு படம் தயாரித்து வந்தோம். ரஜினிகாந்தை வைத்து ராஜாதி ராஜா மற்றும் கமல்ஹாசனை வைத்து சிங்கார வேலன் தயாராகி வந்தது. அப்படத்தினை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். ஆனால் ரஜினிக்கு அவரை பிடிக்கவில்லையாம்.
இளையராஜாவிடம் உங்க தம்பி கங்கை அமரனை இயக்க சொல்லுங்கள் எனக் கூறினார். ஆனால் நண்பர்களான ஆர்.சுந்தர்ராஜனுக்கு இளையராஜா வாக்கு கொடுத்தாராம். இந்த கதை நன்றாக இருக்கும். சுந்தர்ராஜன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இதையும் படிங்க: இவரெல்லாம் எப்படித்தான் பொறந்தாரோ!… இளையராஜா பற்றி மாரிமுத்து ஃபீலிங் காட்டிய தருணம்…
அதனால் அவர் நன்றாக இயக்குவார். இந்த படம் தோல்வி அடைந்தால் நான் இனி ஆர்மோனிய பெட்டியையே தொட மாட்டேன் என சபதம் போட்டு இருக்கிறார். இளையராஜாவின் நம்பிக்கையின் படி வெளிவந்த ராஜாதி ராஜா மாஸ் ஹிட் அடித்தது.
இளையராஜா இசையமைத்த இப்படம் 175 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அண்ணன் வாக்கால் தான் எனக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறினார்.