Cinema News
எஸ்பிபியையும் தாண்டி ரஜினிக்கு மாஸ் ஓப்பனிங் சாங் கொடுத்த சிங்கர்ஸ்! ‘ஜெய்லர்’ படத்தில் நடந்த மேஜிக்
ரஜினியின் பெரும்பாலான படங்கள் ஹிட் ஆவதற்கு அவருடைய ஸ்டைலையும் தாண்டி படத்தில் அவர் பேசும் பஞ்ச் டையலாக்குகளும், அவருக்கு இருக்கும் ஓப்பனிங் சாங்கும் ஒரு விதத்தில் காரணமாக அமையும். அவருக்கு பெரும்பாலான ஓப்பனிங் சாங் ஹிட் ஆனதற்கு பின்னாடியில் எஸ்.பி.பியின் குரலும் ஒரு வகையில் காரணமாக அமைந்திருக்கின்றது.
பாட்ஷா படத்தில் ஒரு மாஸ் அறிமுகத்தை ரஜினிக்கு கொடுத்திருப்பார்கள். அதிலும் நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று பல ஆட்டோகாரர்கள் சரஸ்வதி பூஜையின் போது இந்தப் பாடலைத்தான் போட்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.
இதையும் படிங்க: நெல்சன் கால்ஷூட்டுக்கு காத்திருக்கும் உச்சநட்சத்திரங்கள்… ஒரே வார்த்தையில் கப்சிப் ஆன சுவாரஸ்யம்! நீ நடத்து ராசா!
முத்து படத்திலும் ஒருவன் ஒருவன் முதலாளி, அருணாச்சலம் படத்தில் அதாண்டா இதாண்டா, படையப்பா படத்தில் என் பேரு படையப்பா, சிவாஜி படத்தில் பல்லேலக்கா போன்ற பாடல்கள் ரஜினியின் கெரியரில் பெரிய ஓப்பனிங் சாங் பாடலாக அமைந்தது. இந்த நிலையில் எஸ்.பி.பியையும் தாண்டி ரஜினிக்கு மிகப்பெரிய ஓப்பனிங் சாங்கை கொடுத்த பாடகர்களும் இருக்கிறார்கள்.
ராஜாதிராஜா படத்தில் மனோ குரலில் மலையாள கரையோரம் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் இயற்கையை கொண்டாடி அமைந்த இந்தப் பாடல் ரஜினிக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தையும் கொடுத்த பாடலாக அமைந்தது.
எஜமான் படத்தில் அமைந்த எஜமான் காலெடி மண்ணெடுத்த என்ற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியை தூண்டுவிதமாக அமைந்தது. இந்த பாடலை மலேசியா வாசுதேவன் பாடினார். அதே போல் உழைப்பாளி படத்தில் உழைப்பாளி இல்லாத என்ற பாடலும் மாஸ் ஹிட்டை பதிவு செய்தது. இதையும் மனோதான் பாடியிருப்பார்.
அதே போல் பாபா படத்தில் அமைந்த டிப்பு டிப்பு பாடல் சங்கர் மகாதேவன் குரலில் கொஞ்சம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கும். இப்படி ரஜினிக்கு கண்டிப்பாக ஒரு மாஸ் ஹிட் ஓப்பனிங் சாங் இருந்தால்தான் அது ரஜினி படம் என்ற நிலைமைக்கு சினிமா தள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான ஜெய்லர் படத்தில் ரஜினிக்கான ஒப்பனிங் சாங்கே இருக்காது.
இதையும் படிங்க : உனக்கே தெரியல… நீயெல்லாம் பேச என்ன தகுதி இருக்கு… ப்ளூசட்டை மாறனை கிழித்தெடுத்த ரஜினி ரசிகர்
இதுதான் முதல் முறையாக ஒரு ஓப்பனிங் சாங் இல்லாமல் வெளிவந்த ரஜினி படம் என்று சித்ரா லட்சுமணன் கூறினார். காரணம் இப்ப உள்ள டிரெண்டுக்கு ஏற்றாற் போல ரஜினியும் மாறி வருவதால் ஓப்பனிங் சாங்கை பற்றி அவரும் எதுவும் பேசியிருந்திருக்க மாட்டார். அதன் காரணமாகவே ஜெய்லர் படத்தில் ஓப்பனிங் சாங் மிஸ் ஆகியிருக்கும் என கூறினார்.