80களில் தொடர்ந்து இரவும், பகலும் நடித்து வந்தவர் நடிகர் ரஜினி. ஏனெனில், எப்படியாவது ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சினிமா துறையில் பெரிய நடிகராக வேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. துவக்கத்தில் பாலச்சந்தரின் இயக்கத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தார் ரஜினி.
ஒருபக்கம் கமலுடன் இணைந்து பதினாறு வயதினிலே, அவர்கள், நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சி, இளமை ஊஞ்சாடுகிறது, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் தனியாக நடிக்க துவங்கினார். அப்படி நடித்தபோதுதான் அவருக்கு ஆக்ஷன் கதைகள் தேடி வந்தது.
இதையும் படிங்க: பாட்ஷா பாரு பாட்டுக்கு 10% ஈடாகுமா லியோ செகண்ட் சிங்கிள்!.. பதிலடி கொடுக்க ரெடியான ரஜினி ரசிகர்கள்!..
மாஸ் ஹீரோவாக மாற வேண்டுமெனில் ஆக்ஷன் படங்கள்தான் சரி என ரூட்டை பிடித்த ரஜினி தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து பெரிய ஹீரோவாகவும் மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். அதன்பின் ரஜினியின் உயரத்தை யாராலும் தொட முடியவில்லை. இப்போது வரை அவரின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாராலும் தட்டிப்பறிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுக்க போய் ரஜினி படம் ஒன்று சிக்கலில் மாட்டிய கதையைத்தான் இங்கே பார்க்க போகிறோம். ஐ.வி.சசி இயக்கத்தில் ரஜினி நடித்து 1980ம் வருடம் வெளியான திரைப்படம் காளி. அமிதாப்பச்சன் நடித்த ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் இது.
இதையும் படிங்க: ஒரே படத்தில் வில்லனாக நடித்த ரஜினி, கமல்! அப்போ ஹீரோ யாரு? சொன்னா ஆச்சரியப்படுவீங்க
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கிருந்து ஸ்டில் போட்டோகிராபருக்கு ரஜினி விதவிதமாக போஸ் கொடுத்துகொண்டிருந்தார். அருகில் கயிறு ஒன்று கிடைக்க அதை எடுத்து கழுத்தில் சுற்றி தனது ஸ்டைலில் ரஜினி போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் பத்திரிக்கைகளில் வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையே உருவாக்கிவிட்டது.
ஆனால், படம் முடிந்து வினியோகஸ்தர்களுக்கு இப்படத்தை போட்டு காட்டியபோது ‘ரஜினி கழுத்துல கயிறு சுத்தியிருந்த காட்சி எங்க காணோம்?’ என கேட்க, அது படத்தில் இல்லை என இயக்குனர் சொல்ல ‘அந்த காட்சியை எடுத்து படத்துல சேர்த்தாத்தான் படத்தையே வாங்குவோம்’ என சொல்லிவிட்டனராம். அதன்பின், அதுபோல ஒரு காட்சியை எடுத்து படத்தில் சேர்த்த பின்னரே அப்படத்தை வினியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர்.
ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தாமாடா!..
இதையும் படிங்க: கதையை கேட்டு கடுப்பான ரஜினிகாந்த்… அப்புறம் எப்படி ஹிட் ஆச்சு தெரியுமா?.. அட அந்த படமா?!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…