Thalaivar 170: ஜெயிலர் படம் ஹிட் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த படத்தின் படப்பிடிப்பையே துவங்கிவிட்டார் ரஜினி. பொதுவாக ரஜினி ஒரு படம் முடிந்த பின் சில மாதங்கள் இடைவெளி விடுவார். ஆனால், ஜெயிலர் படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று ரூ.700 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதால் அடுத்த படத்தை உடனே துவங்கிவிட்டார்.
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், தெலுங்கு நடிகர் ராணா, மலையாள நடிகர் பஹத் பாசில் என பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் திருவனந்தபுரத்தில் துவங்கியது.
இதையும் படிங்க: ரஜினி படத்தோடு மோதிய விஜய் படம்! தோல்விக்கான காரணம் இதுதானா? – பணத்தை வாங்க மறுத்த எஸ்.ஏ.சி
ஜெய்பீம் போல இந்த படமும் சமூக கருத்துள்ள படமாக உருவாகவுள்ளது. திருவனந்தபுரத்தில் சில நாட்கள் படப்பிடிப்பை முடித்த பின் படக்குழு சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அதன்பின் கன்னியாகுமாரி, நாகர்கோவில் பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனெனில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு இளைஞர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது.
இதையும் படிங்க: கலைஞரின் வசனத்தில் நடிக்க மறுத்த ரஜினி!.. காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!..
இந்நிலையில், தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்தில் முடித்து அடுத்த வருட கோடைகால விடுமுறையில் வெளியிட வேண்டும் என ரஜினி சொல்லிவிட்டாராம். எனவே, படக்குழுவும் அதை நோக்கி வேலை செய்து வருகிறார்கள். பொதுவாக தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை இந்த மூன்றையும் பெரிய நடிகர்கள் திட்டமிடுவார்கள்.
அதேபோல்தான் ரஜினியும் இந்த படத்தை திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே, இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களும் அடுத்த வருடம் கோடை விடுமுறை குறி வைத்துள்ளது. எனவே, கடைசி நேரத்தில் இதில் என்னென்ன மாற்றங்கள் நேரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…