கமலிடமிருந்து வந்த போன் கால்!.. ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன சக நடிகர்…

Published on: December 27, 2023
rajini kamal
---Advertisement---

Actor rajini: நடிகர் ரஜினி ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே கமல் ஹீரோவாக நடித்தார். அதாவது, ரஜினி சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கமல்ஹாசன் ஒரு ஹீரோ. சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். நடிப்பு கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தபோதே கமலின் படங்களை விரும்பி பார்ப்பவர் ரஜினி.

இயக்குனர் பாலச்சந்தரை ரஜினிக்கு பிடிக்கும் என்பதால் கமலும் பிடித்துப்போனார். அபூர்வ ராகங்கள் படத்திற்க்கு பின் பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சி, அவர்கள், நினைத்தாலே இனிக்கும், ஆடு புலி ஆட்டம் என தொடர்ந்து கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினி. ஆனால், இனிமேல் நாம் இருவரும் தனித்தனியாக நடிப்போம் என கமல் சொன்னதை கேட்டு அப்படியே நடிக்க துவங்கினார் ரஜினி.

இதையும் படிங்க: ராதிகாவையும் சரத்குமாரையும் அழவைத்த ரஜினி!. என்ன நடந்ததுன்னு தெரியுமா?

ஒருகட்டத்தில் கமலையே ஓவர் டேக் செய்து சூப்பர்ஸ்டாராகவும் ரஜினி மாறினார். கமல்ஹாசன் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ஒரு ரூட்டில் போனால் ரஜினியோ மசாலா படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோவாக மாறினார். தனது போட்டி நடிகர் என்றாலும் கமல் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் எப்போதும் வைத்திருப்பவர் ரஜினி.

இதை பல பேட்டிகள் மற்றும் மேடைகளில் அவர கமலை பற்றி பேசியதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ரஜினிக்கு இப்போதும் ஏதோ ஒன்று சரியாக பிடிபடவில்லை எனில் அவர் முதலில் பேசுவது கமலிடம்தான். இப்போது கூட எங்கேயாவது கமலை பற்றி பேசும் சூழ்நிலை வந்தால் மிகவும் மரியாதையாக பேசுவார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் லிங்கா. இந்த படம் உருவானபோது கோச்சடையான் படமும் உருவானது. இந்த படத்தை பார்க்க கமலை ரஜினி அழைத்திருக்கிறார். ஆனால், கமல் அந்த படம் பார்க்கபோன போது ரஜினி லிங்கா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார்.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு படமா? 300,400 கோடி வாங்க தெரியுது – ரஜினியை நிக்க வச்சு கேள்வி கேட்ட பிரபலம்

உடனே ரஜினிக்கு கமல் போன் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட நடிகர் இளவரசு ‘லிங்கா படத்தில் ரஜினி சாருடன் நடித்தேன். ரஜினி கால் மேல் போட்டு பாட்ஷா பட ஸ்டைலில் அமர்ந்திருந்தார். அப்போது கமலிடம் இருந்து போன் வந்தது. கமல் போனில் இருக்கிறார் என உதவியாளர் சொன்னதும் காலை கீழே இறக்கிவிட்டார். ‘நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன்.. நீங்கள் படம் பாருங்கள்.. தேங்க் யூ’ என சொல்லிவிட்டு போனை கட் செய்த பின்னரே மீண்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார்.

ilavarasu

ரஜினி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை கமல் பார்க்க போவதில்லை. எல்லோர் முன்னைலையிலும் அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் ரஜினிக்கு இல்லை. இப்படி எந்த நடிகரும் இருக்க மாட்டார்’ என இளவரசு கூறியிருந்தார்.

இதையும் படிங்க: கையில் காசில்லாத போதும் நண்பரை சாப்பிட அழைத்துச் சென்ற ரஜினி.. ஹோட்டலில் நடந்தது இதுதான்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.