அடுத்த குட்டிக்கதைக்கு ரெடியான ரஜினி!.. லால் சலாம் ஆடியோ விழா அப்டேட் இதோ!..

ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டுக்கு பின் ரஜினி தனது அடுத்த பட வேலைகளை உற்சாகத்துடன் செய்து வருகிறார். ஒருபக்கம் மகள் இயக்கத்தில் லால் சலாம் பட வேலைகள், ஒருபக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் தொடர்பான பணிகள், ஒரு பக்கம் ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தின் ஷுட்டிங் என பிஸியாகிவிட்டார்.
ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜெய்பீம் படத்திற்கு பின் இப்படத்தை ஞானவேல் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இப்படத்தை விட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கவுள்ள படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க: வச்சாங்கய்யா கன்னிவெடிய! சிம்புவும் தனுஷும் ஒரே படத்திலா? இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே
ஏனெனில், லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தலைவர் 171 படத்திற்கு பலரிடம் ஆலோசித்து திரைக்கதையை எழுதி வருகிறார். ஞானவேல் படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஒருபக்கம், சௌந்தர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தை வருகிற பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தாலும் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: அன்லிமிட்டேட் அழகு அள்ளுது!. பிரியங்கா மோகனின் அழகில் குவியுது லைக்ஸ்!…
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜெயிலர் பட ஹிட் அடிக்க அந்த பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது முக்கிய காரணமாக இருந்தது.
அதோடு, அந்த விழாவில் அவர் கூறிய பருந்து - காக்கா இருந்து கதையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் அடுத்த குட்டிக்கதையை சொல்ல ரஜினி ரெடியாகி வருகிறார். அதுவே அந்த படத்தை ஓட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
இதையும் படிங்க: ‘துருவ நட்சத்திரம்’ முதலில் ரஜினிக்காக சொல்லப்பட்ட கதை! ஓ இதுதானலதான் நடிக்கலயா?