சுயசரிதை எழுதப்போன ரஜினிகாந்த்… அய்யயோ.. இத சொல்லணுமே? அப்போ எழுத வேண்டாம்..

by Akhilan |
சுயசரிதை எழுதப்போன ரஜினிகாந்த்… அய்யயோ.. இத சொல்லணுமே? அப்போ எழுத வேண்டாம்..
X

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்துக்கு தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த விஷயத்தினை திடீரென சுயசரிதையாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் அந்த ஒரு விஷயத்தால் அந்த ப்ளானையே கேன்சல் பண்ணும் நிலை வந்ததாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்திற்கு பாபா திரைப்படத்தின் போது சொர்க்கத்தை காட்ட வேண்டும் என்ற ஆசை வருகிறது. அது குறித்து எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்டபோது அவர் எனக்குமே அது கஷ்டமான விஷயம் தான். இயக்குனர் சங்கரிடம் பையன் இருக்கான். அவன் பேரு எஸ் ராமகிருஷ்ணன். அவனை கேட்கிறது சூப்பரா செஞ்சு தருவான் என்கிறார்.

இதையும் படிங்க: இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..

அங்கு போய் ராமகிருஷ்ணனை பார்க்கிறார் ரஜினிகாந்த். இருவருக்குள்ளும் அங்கிருந்து நட்பு உருவாகிறது. அவரின் எழுத்தை பார்த்த ரஜினிகாந்த் தன் சுயசரிதையை எழுத வேண்டும் என ஆசைப்படுகிறார். ரஜினி சொல்ல எஸ் ராமகிருஷ்ணன் சுயசரிதையை எழுத தொடங்குகிறார்.

ஒரு பண்ணை வீட்டில் கிட்டத்தட்ட 15 நாட்கள் ரஜினி சொல்ல சொல்ல எஸ் ராமகிருஷ்ணன் அந்த சுயசரிதையை எழுதிக் கொண்டு வந்தாராம். அதை வாங்கி ரஜினி படிக்கும் போது ரொம்பவே அருமையாக வந்ததாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அங்குதான் ஒரு பிரச்சனை வந்ததாம்.

ரஜினியின் சுயசரிதை கண்டிப்பாக அவரின் இமேஜை பெரிய அளவில் கெடுக்கும் என நினைத்திருக்கிறார். மேலும் உண்மை என்பதால் பலர் குறித்துப் பேச நேரிடும். அது செய்தித்தாளில் வைரலாக பரவி சர்ச்சையான விஷயமாக மாறிவிடும். அதற்கு விளக்கம் வேறு கொடுக்கும் நிலை உருவாகும் என்பதால் சுயசரிதை எழுதும் முடிவை அன்றுடன் கைவிட்டார் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: கமல் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல!… கௌதம் மேனன் என்ன சொல்றார் பாருங்க!..

Next Story