கூட்டிட்டு வந்து அவமானப்படுத்தக் கூடாது!.. அக்கட தேச நடிகருக்காக ரஜினி செய்த காரியம்!.
தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத நிலையில் இருப்பவர் சூப்பர் ஸ்டாரும் நடிகருமான ரஜினிகாந்த். அவரே இன்றளவு ஆச்சரியப்படும் அளவிற்கு எல்லையில்லா வளர்ச்சியடைந்திருக்கிறார். அவர் அடிக்கடி பேட்டியில் கூறும் போது கூட ஒரு கன்டக்ராக இருந்த நான் எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தேன் என்று ஆச்சரியப்பட்டுக் கொள்வேன் என்று அடிக்கடி கூறுவார்.
ஒரு ஆன்மீகவாதியாக , ஒரு நல்ல மனிதராக , அனைவரும் விருப்பப்படும் மனிதராக ரஜினி இருக்கிறார் என்றால் அவர் பின்பற்றும் கொள்கைகளும் அவர் மற்றவர்களிடம் வைத்திருக்கும் மரியாதையும் ஒரு காரணமாக இருக்கலாம். அக்கட தேசத்தில் இருந்து வந்தாலும் தமிழ் சினிமா மீதும் தமிழக மக்கள் மீதும் அலாதி பிரியம் கொண்டவராகவே இருக்கிறார் ரஜினி.
தமிழக மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் தான் ரஜினி. இத்தனை பண்புமிக்க ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தலைவரான டி.ஜி.தியாகராஜன் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். ஒரு சமயம் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக பொள்ளாச்சி சென்றார்களாம்.
அந்த படத்தில் ரஜினி, சிரஞ்சீவி, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க அவர்கள் தங்குவதற்காக அறைகளை தனித்தனியாக புக் செய்து கொடுத்திருக்கிறார் சத்யஜோதி நிறுவனர். அப்போது ரஜினி தனக்காக ஒதுக்கப்பட்ட அறையை பார்வையிட்டாராம். அதே போல் சிரஞ்சீவிக்காக ஒதுக்கப்பட்ட அறையையும் பார்வையிட்டாராம்.
இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையைவிட சிரஞ்சீவியின் அறை மிகவும் சிறியதாக இருந்ததாம். உடனே ரஜினி நம்மை நம்பி வந்தவர்களை நல்லப் படியாக கவனித்து அனுப்ப வேண்டும் , அது தான் தமிழக பாரம்பரியம் என்று கூறி தன் அறையை சிரஞ்சீவிக்காக விட்டுக் கொடுத்து விட்டாராம் ரஜினி.
இதையும் படிங்க : தமிழில் இருந்து ஹாலிவுட்டுக்குப் போன டாப் நடிகர்கள்… லிஸ்ட்டை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!!
இப்படி பட்ட ஒரு மனிதரை இன்று காண்பது என்பது அரிது. அதனாலேயே அவர் என்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் என்று அந்த பேட்டியில் தியாகராஜன் கூறி பெருமிதம் கொண்டார்.