ரஜினியின் படமே எமனாக வந்த பரிதாபம்...! அந்த 1000 ரூபாய் மட்டும் இருந்திருந்தா இப்படி ஆயிருக்குமா...?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பகாலங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கமல் ரஜினி நடிப்பில் வெளிவந்த 16 வயதினிலே படம் தான் அவர் நடித்த பரட்டை என்ற கதாபாத்திரம் தான் அவருக்கு பெருமை சேர்த்தது. மக்கள் மத்தியிலும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
அதன் பின் இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து ஒரு புரொடியூசர் ரஜினியிடம் சம்மதம் பெற்று 1000 ரூபாய் முன்பணமாக ரஜினி கேட்க தருகிறேன் என இழுத்தடிக்க கடைசியில் ஏவிஎம் ஸ்டியோ வரை வந்து அப்பவும் ரஜினி 1000 ரூபாயை கேட்டாராம். அதற்கு அந்த புரொடியூசர் நீ என்ன பெரிய இவனா? 4 படத்துல நடிச்சுட்டு அதுக்குள்ள பெருசா பேசுற? என அவமானப்படுத்தப்பட்டாராம்.
சூட்டிங் வரும் போது கார் அனுப்பி அழைத்து வந்த ரஜினியை திரும்பி போகும் போது காரை அனுப்பமுடியாது. ஒழுங்கா நடந்தே போ என கூறிவிட்டனராம். கையில் காசும் இல்லாமல் நடந்து போன ரஜினியை பார்த்த ரசிகர்கள் 16 வயதினிலே படத்தில் வரும் ஒரு டைலாக்கான இது எப்படி இருக்கு? என இவரை பார்த்ததும் கூறிக்கொண்டே இருந்தனராம்.
ஆனால் ரஜினிக்கோ நம்ம நிலைமையை பார்த்து தான் இப்படி பேசுகிறார்களோ என நினைத்து விட்டாராம்.என் படத்தின் வசனமே எனக்கு ஆப்பு என நினைத்து விட்டேன் என கூறினார் ஆனால் அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டதால் அது பிடித்து போயிதான் அந்த டைலாக்கை அடிக்கடி பேசிக் கொண்டு வந்திருக்கின்றனர் ரசிகர்கள். அந்த அளவுக்கு என்னை நடிகனாக மாற்றியது பரட்டை என்ற கதாபாத்திரம் என ஒரு விழா மேடையில் ரஜினி கூறினார்.