நண்பனை உதறி தள்ளிய ரஜினி...! அப்போ எல்லாம் படத்துல மட்டும் தானா தலைவா...?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் தயாராக உள்ள ஜெய்லர் என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் சேர்ந்து பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், போன்ற பலரும் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவுடன் நிழல் உலக தாதா மாறியான கதாபாத்திரமாக இருக்கலாம் என தகவல் வட்டாரங்கள் பேசிவருகின்றனர்.
ஏற்கெனவே அந்த மாதிரியான கதாபாத்திரங்களில் பாட்ஷா மற்றும் தளபதி போன்ற படங்களில் நடித்து படத்தின் வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார். இந்த நிலையில் பாட்ஷா படத்தில் முன் பாதி கதையில் ரஜினிக்கு நண்பனாக சரண்ராஜ் நடித்திருப்பார். அந்த இணை பார்ப்பதற்கு மேலும் கதையில் மெருகூட்டியது.
ஆனால் சரண்ராஜ்க்கு முன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகர் மம்மூட்டி தானாம். ஏற்கெனவே இரண்டு பேரும் சேர்ந்து தளபதி என்ற படத்தில் நெருங்கிய நண்பர்களாக நடித்திருப்பார்கள். இதை கருத்தில் கொண்டு மம்மூட்டி வேண்டாம் சரண்ராஜை நடிக்க வைக்கலாம் என ரஜினி இயக்குனரிடம் தெரிவித்தாராம்.