என்னை ஜெயிக்க அவராலதான் முடியும்!.. ரஜினி சொன்ன அந்த ஹீரோ யார் தெரியுமா?..
1975ம் வருடமே சினிமாவில் அறிமுகமாகிவிட்டாலும் 80களில் முன்னணி நடிகராக மாறியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். துவக்கத்தில் பாலச்சந்தரின் படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் கமலுடன் இணைந்து பல படங்களிலிலும் நடித்தார். இதில், பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சி உள்ளிட்ட படங்கள் முக்கியமானவை.
ரஜினி சினிமாவில் நடிக்க துவங்கியபோது கமல்ஹாசன் பெரிய ஸ்டாராக இருந்தார். எனவே, அவருடன் பயணம் செய்தார் ரஜினி. ஆனால், ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து தனியாக நடிப்பது என முடிவெடுத்தனர். எனவே, இருவரும் தனித்தனியாக தங்களின் பாணியில் நடிக்க துவங்கினார்கள்.
இதையும் படிங்க: கேப்டன் வீட்டில் அமீர்!. கோபத்தில் காபி-யை திருப்பி அனுப்பிய விஜயகாந்த்!.. நடந்தது இதுதான்!….
ரஜினியும், கமலும் தனித்தனியாக ஹிட் படங்களை கொடுத்தார்கள். எனவே ரஜினி - கமல் போட்டி என்பது உருவானது. நிஜவாழ்வில் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதிக்கும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் தொழிற்போட்டி என்பது இருக்கும் இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது.
ரஜினி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தபோது அவருக்கு கமல் மட்டுமில்லை. பல நடிகர்கள் போட்டியாக இருந்தார்கள். மோகன் படங்கள் கூட வசூலை வாரிக் குவித்தது. அதேபோல், பாக்கியராஜ் மற்றும் டி.ராஜேந்தரின் படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது. ஒருமுறை தனது படம் வெளியானபோது டி.ஆர் படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் டி.ஆரிடம் ‘உங்கள் படத்தை கொஞ்சம் தள்ளி வையுங்கள்’ என ரஜினி கேட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.
இதையும் படிங்க: விஜயகாந்த் போலவே பெரிய மனசு!.. தம்பிக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய விஜய பிரபாகரன்.. இத்தனை கோடியா?
அதேபோல், ரஜினிக்கு மிகவும் டஃப் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி படத்தோடு வெளியாகி விஜயகாந்தின் படங்கள் அதிக வசூலை பெற்றது பலமுறை நடந்திருக்கிறது. அதேபோல், 90களில் ரஜினிக்கு அதிக டஃப் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். அவரின் படங்களுக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ரஜினியே ஆச்சர்யப்பட்டார்.
ஒருமுறை ‘உங்களுக்கு போட்டி நடிகர் ராமராஜனா?’ என கேட்டதற்கு ‘எனக்கு ராமராஜன் போட்டி இல்லை. எனது படத்தின் வசூலை முறியடிக்க விஜயகாந்தால் மட்டுமே முடியும்’ என சொன்னார் ரஜினி. ரஜினி அப்படி சொன்னதற்குக் காரணமும் இருக்கிறது. சி சென்டர் என சொல்லப்படும் கிராமப்புறங்களில் ரஜினியை விட விஜயகாந்துக்கே அதிக ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.