Cinema News
மதுரையில் நடந்த சம்பவம்!.. கடைசி வரை காப்பாத்தணும்!.. சூப்பர்ஸ்டார் விதை விழுந்தது அங்குதான்!..
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருப்பவர் நடிகர் ரஜினி. ஆனால், இப்போதுள்ள சில நடிகர்களை போல அந்த பட்டத்தை ரஜினி தேடி செல்லவில்லை. பட்டம் அவரை தேடி வந்தது. அந்த பட்டத்தை அவர் வாங்கவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்டது.
அவரது திரைப்படங்கள் வசூலை வாரிகுவித்ததால் கலைப்புலி தாணு ஒரு மேடையில் அந்த பட்டத்தை ரஜினிக்கு கொடுக்க இப்போது வரை அது தொடர்கிறது. சூப்பர்ஸ்டார் என்றால் ‘வசூல் மன்னன்’ என எடுத்து கொள்ளலாம். எந்த நடிகரின் படங்கள் அதிக வசூலை தொடர்ந்து கொடுக்கிறதோ அவரே சூப்பர்ஸ்டார்.
இதையும் படிங்க: மாமன்னன் மேடையிலேயே வடிவேலு சொன்ன அட்வைஸ்!. கடுப்பாகி முகம் சிவந்த மாரி செல்வராஜ்!..
துவக்கத்தில் ரஜினிக்கு அந்த பட்டம் பிடிக்கவில்லை. திரைப்படங்களிலும், பத்திரிக்கைகளும் அப்படி போட வேண்டாம் என ரஜினியே கோரிக்கை வைத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரால் அதை தடுக்கமுடியவில்லை. சினிமா உலகமும், ரசிகர்களும் அவரை அப்படி அழைக்க அவரும் விட்டுவிட்டார். ஆனால், மிகவும் எளிமையான, தன்னடக்கம் அதிகமுள்ள மனிதரான ரஜினிக்கு அந்த பட்டத்தில் அதிக ஆர்வமெல்லாம் இல்லை. இதை அவருடன் நெருங்கி பழகிய பலருக்கும் தெரியும்.
சமீபகாலமாக ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை குறிவைத்து சில நடிகர்கள் சினிமா விழாக்களில் பேச, ரஜினி ரசிகர்களுக்கு அது கோபத்தை ஏற்படுத்தி சமூகவலைத்தளங்களே களோபரமானது. அமைதியாக இருந்த ரஜினி ஜெயிலர் படவிழாவில் பருந்து – காக்கா கதையை சொல்ல மீண்டும் பரபரப்பு கிளம்பியது.
இதையும் படிங்க: ரஜினிக்கு குறுக்கே வந்த நடிகர்!. தலைவர் 170 டைட்டிலை கூட சொல்ல முடியலயே!. இது என்னடா சோதனை!…
ரஜினி ஒருமுறை சொன்னார் ‘பல வருசங்களுக்கு முன்னாடி மதுரை போயிருந்தப்போ மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனேன்.. அப்ப அங்க இருந்தவங்க தங்களோட பேர், நட்சத்திரம், ராசி இதெல்லாம் சொல்லி அர்ச்சனை பண்ணாங்க.. கோவில் குருக்கள் என்னிடம் ‘உங்க நட்சத்திரம் என்ன?’ என கேட்டார். தெரியாது சாமி என்றேன். என்னுடைய ஸ்டாரே தெரியாத எனக்கு என் ரசிகர்கள் சூப்பர்ஸ்டார்னு ஒரு ஸ்டார் கொடுத்தாங்க. அந்த நட்சத்திர ராசியை கடைசிவரை காப்பத்தணும்னு நினைச்சேன்’ என சொன்னார்.
சொன்னது போலவே இப்போது ஜெயிலர் பட வசூல் மூலம் அந்த சூப்பர்ஸ்டார் ராசியை ரஜினி காப்பாற்றிவிட்டார் என்றுதால் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: அப்போ எல்லாம் 250 நாள்!.. இப்போ 50 நாளுக்கே ஆடுறாங்க!.. மாமன்னன் டீமை மானபங்கம் செய்த கீர்த்தி சுரேஷ்!..