Cinema News
சூப்பர்ஸ்டார் பட்டத்த வச்சிக்கிட்டு நான் படுற கஷ்டம் இருக்கே!.. மேடையில் புலம்பிய ரஜினி…
சமீப நாட்களாக விஜய் ரசிகர்கள் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிவந்தனர். நடிகர் விஜயின் சம்பளம் 150 கோடி என்றும் அவரின் படங்களின் வசூலும் அதிகமாக உள்ளது. எனவே அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர். இதானல், சமூக வலைதளங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது. மேலும் விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைதளங்களில் சண்டை நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் வெளியனது.
இந்த பாடலின் மூலம் ரஜினிகாந்த் விஜய்க்கு பதிலடி கொடுத்துவிட்டார் என்று பலர் கூறி வந்தனர். இந்த பாடல் வரிகளும் அதற்கு ஏற்றது போல தான் இருந்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில் இந்த பிரச்சனைக்கு ரஜினிகாந்த் தக்க பதிலடி கொடுப்பார் என்று பலர் கூறிவந்தனர். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஜெயிலர் பட ஆடியோ லாஞ்ச் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தால் தான் பட்ட கஷ்டங்களை கூறி புலம்பியுள்ளார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தான் ரஜினிகாந்திற்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கினார். அப்போது கூட ரஜினிகாந்த், இதெல்லாம் வேண்டாம் என மிகவும் மறுத்துள்ளார். இது குறித்து மேடையில் பேசிய ரஜினிகாந்த், 80களில் எனக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுத்த பிறகு பலர் என்னிடம் பிரச்சனை செய்தார்கள். இந்த பட்டத்தால் நான் ஏகப்பட்ட வெறுப்புகளை சம்பாதித்தேன். இந்த வெறுப்பின் நெருப்பில் வளர்ந்தவன் நான். அந்த காலத்தில் நான் ஏன் அந்த பட்டத்தை கொடுத்ததற்கு பயந்தேன் என்றால், அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார்.
அவ்வளவ பெரிய நடிகர் இருக்கும் போது, நாம் இதை வைத்துக்கொள்ள கூடாது என பயந்தேன் என ரஜினிகாந்த் பேசியுள்ளார். மேலும் கழுகு காக்கா கதையையும் அவர் கூறியிருந்தார். ரஜினி மட்டுமல்ல கலாநிதி மாறன் கூட இந்த பிரச்சனையை பற்றி பேசியிருந்தார். 73 வயதில், எந்த நடிகராவது, இப்படி ஒரு மாஸோடு, இப்படி ஒரு ரசிகர் படையோடு, இத்தனை தயாரிப்பாளர்கள் வந்து வாசலில் காத்து கிடைக்கும் படி இருந்தால், அது யாராக இருந்தாலும், சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுத்துக்கொள்ளட்டும் என்று கலாநிதி மாறம் ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் விழாவில் பேசியுள்ளார்.