யாருக்கும் தெரியாத ரஜினியின் இன்னொரு முகம் இதுதான்....கேட்டா ஷாக் ஆவீங்க!...

by Manikandan |   ( Updated:2022-03-24 12:58:14  )
யாருக்கும் தெரியாத ரஜினியின் இன்னொரு முகம் இதுதான்....கேட்டா ஷாக் ஆவீங்க!...
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். இவர் அரசியலுக்கு வருவார் வருவார் என்று அவ்வப்போது அறிவிப்புகள் வந்தாலும், இறுதியில் வரவில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். இதில் ஒரு சிலர் மட்டும் ரஜினி அப்படி என்ன செய்துவிட்டார் என்று அவ்வப்போது கேள்விகளை கேட்பதுண்டு.

ஆனால், உண்மையில் ரஜினி தன்னுடன் இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தான். தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் என்பதும் உண்மை.

இவர் தன்னை ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நல்ல கமர்சியல் ஹீரோவாக மாற்றிய இயக்குனர் எஸ்.பிமுத்துராமன் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஒரு பெரிய உதவி செய்துள்ளார். அதாவது அவர்கள் அனைவரும் பணம் முதலீடு செய்து ரஜினியிடம் அவரை வைத்து படத்தை தயாரிக்க கேட்டுள்ளனர். அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்துள்ளார்.

அப்படித்தான் பாண்டியன் எனும் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருப்பார். எஸ்.பி.முத்துராமன் மற்றும் அவரது உதவியாளர்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து, அதில் வந்த லாபத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படியுங்களேன் - பயமெல்லாம் இப்போ முழுசா போய்டுச்சா விஜய்.?! அந்த நடிகை ஓகே தானா.?!

அதேபோலத்தான் தன் நண்பர்களுக்காக அருணாச்சலம் படத்திலும் நடித்து கொடுத்தார் ரஜினிகாந்த். அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அதில் வந்த லாபத்தை அவர்கள் பங்கிட்டு எடுத்துக் கொண்டார்கள் என்பது உண்மை.

இப்படி தன்னுடன் இருப்பவர்கள், தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு எப்போதும் நல்லதை மட்டுமே நினைக்கும் நல்ல மனிதர் ரஜினிகாந்த் என திரையுலகில் அவரை பற்றி அறிந்த பலரும் கூறுவதுண்டு.

Next Story