ரஜினி சத்தியம் வாங்கிட்டு தான் உள்ளேயே விட்டார்.! செஞ்ச வேலையெல்லாம் அந்த மாதிரி.!

by Manikandan |
ரஜினி சத்தியம் வாங்கிட்டு தான் உள்ளேயே விட்டார்.! செஞ்ச வேலையெல்லாம் அந்த மாதிரி.!
X

ஒரு திரைப்படத்தை படமாக்கும்போது அந்த திரைப்படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சிகளும், அதேபோல அந்த படவிழாக்களில் பிரபலங்கள் பேசும் பேச்சுகளும் மேடை நாகரீகம் போன்றது. அதுவே திரைக்குப்பின்னால் வேறு மாதிரியான சினிமா உலகம் இருக்கும். படப்பிடிப்பு தளங்களில் மிகவும் டென்ஷனாக இருக்கும் நபர் என்றால் அது இயக்குனர் தான். அங்குள்ள நடிகர்கள் முதல் அடிமட்ட டெக்னீசியன் வரை அனைவரையும் வேலை வாங்கும் திறன் இவரை சார்ந்தது.

சில சமயங்களில் அவ்வாறு வேலை வாங்கும் இயக்குனர்கள், அந்த நபர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் இவருக்கு கோபம் அதிகமாகவே வரும். அதனால் சில நேரம் வார்த்தைகள் தவறாகும். அது மனித இயல்பு தான். அப்படி ஒரு சம்பவத்தை நான் அண்மையில் நடிகர் ராதாரவி மேடையில் தெரிவித்தார்.

லிங்கா எனும் திரைப்படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் ராதாரவி என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படம் ஒரு சிவன் கோயிலை சம்பந்தம் படுத்தியது. அப்போது அந்த கோவிலுக்குள் சூட்டிங் எடுக்க வேண்டும் என்ற நிலைமை வந்தபோது,

இதையும் படியுங்களேன் - தளபதியின் பீஸ்ட் பார்த்த ஷாலினி அஜித்.! இது எங்கே? எப்போ நடந்தது.?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனரிடம் சத்தியம் வாங்கி கொண்டாராம். என்னவென்றால், எவ்வளவு கோபம் வந்தாலும் உள்ளே கெட்ட வார்த்தை பேச கூடாது என்று சத்தியம் வாங்கினாராம். உடனே குறுக்கிட்ட ராதாரவி நான் சூட்டிங்கில் கலந்து கொள்ளலாமா என்று கலகலப்பாக கேட்டுள்ளார். இந்த சம்பவத்தை ராதாரவி அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி. தன் பட சூட்டிங் முடிந்த பிறகு இமயமலைக்கு ஆன்மீக பயணத்திற்கு கிளம்புவார். சிவன் மீது அதிக பக்தி கொண்டவர். அதன் காரணமாகவே கோவிலுக்குள் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று அவர் சத்தியம் வாங்கியதாக மேடையில் ராதாரவி தெரிவித்தார்.

Next Story