இப்படி ஒரு ப்ரோமோஷனை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க! ‘லால்சலாம்’ படத்திற்காக ரஜினி கொடுக்கப் போகும் கிஃப்ட்

rajini
Lalsalaam Movie: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்பம் லால்சலாம். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
லால் சலாம் படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருக்கிறார், படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. வரும் பொங்கல் அன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்காரை தட்டி தூக்குவது உறுதி! அத எப்படிபா லைவ்ல எடுத்தாங்க? ஆச்சரியப்படுத்திய ‘தங்கலான்’
இதனிடையில் இந்தப் படத்தின் சில காட்சிகள் அழிந்து விட்டதாக கூறி மீண்டும் மறு சூட்டிங் ஒரு பத்து நாள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்தார். இதே பொங்கல் அன்று தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது.
ஒரு பக்கம் தனுஷ். ஒரு பக்கம் ஐஸ்வர்யா என வாழ்க்கையில் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது கெரியரிலேயும் போட்டியை ஆரம்பித்து விட்ட்னர். இதனால் லால்சலாம் படத்தை பெரிய அளவில் ப்ரோமோட் செய்ய வேண்டும் என படக்குழு எண்ணியிருக்கிறது.
இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…
அதுவும் தன்னுடைய மகள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவும் ரஜினி மிகவும் மெனக்கிட்டு வருகிறார். அதனால் படத்தை பெரிய அளவில் கொண்டு போக ரஜினியும் ஒரு விதத்தில் உதவ இருக்கிறார். படத்தின் ஆடியோ விழாவிற்கு பல முக்கிய தலைகளை இறக்க முடிவு செய்திருக்கிறார் ரஜினி.
ஏற்கனவே ரஜினி 170ல் அமிதாப் நடிப்பதால் அவரை ஆடியோ விழாவிற்கு அழைக்க இருக்கிறார்கள். அது போக சிரஞ்சீவி, மம்மூட்டி, சிவராஜ் குமார் என மற்ற மொழி சினிமாக்களின் சூப்பர் ஸ்டார்கள் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வர அவர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் கார்த்திக்குக்கு அடிமை!.. அட இதை சொன்னது யார் தெரியுமா?…