அஜித் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி!.. படத்தை பார்த்து இயக்குனரிடம் சண்டை போட்ட தலைவர்..
தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாஸ் நடிகராக வலம் வரும் நிலையில் இவருக்கும் ரஜினிக்கும் ஏதோ ஒரு வித தொடர்பு இருப்பதாகவே பல செய்திகள் வெளியாகியிருக்கின்றது. மற்றும் ரஜினிக்கு பிடித்தமான ஹீரோவாக அஜித்தும் கமலுக்கு பிடித்தமான ஹீரோவாக விஜயும் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
ரஜினி-அஜித்
மேலும் ரஜினியின் அந்த மாஸ் லுக் மற்றும் ஸ்டைல் அஜித்திடம் மட்டுமே இருக்கின்றன. இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வரலாறு’ படத்தை பார்த்து ரஜினி பிரமித்த விஷயம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. ஒரு சமயம் கமலுக்கு அவ்வைசண்முகி படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் அவருடன் இணைய இருப்பதாக இருந்தது.
அதனால் நடிப்பிற்கு தீனி போடனும்னா அது கண்டிப்பா சிவாஜி ஸ்டைலில் இருந்தால் தான் முடியும் என முடிவு செய்து சிவாஜியின் ‘தெய்வமகன்’ படத்தை அடிப்படையாக கொண்டு வரலாறு படத்தின் கதையை கமலிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அது பிடிக்காத கமல் ‘தெனாலி’ படத்தின் கதையில் நடிக்க ஓகே பண்ணியிருக்கிறார்.
டிராப் ஆன ஜக்குபாய்
கே.எஸ்.ரவிக்குமாரை பொறுத்தவரைக்கும் அவர் எழுதும் கதை கமல் , ரஜினி ஆகிய இருவருக்கும் தெரிந்திருக்குமாம். அதே போல் வரலாறு கதையும் ரஜினிக்கு தெரிந்திருக்கு.ஆனால் அப்போது ரஜினி ‘ஜக்குபாய்’ படத்தில் நடிப்பதாக இருந்து அது அப்படியே டிராப் ஆகிவிட்டது. இதனை அடுத்து ரஜினி ‘சந்திரமுகி’ படத்தில் பிஸியாக விட்டார்.
இதற்கிடைப்பட்ட நேரத்தில் தான் அஜித்தை வைத்து ‘வரலாறு’ படத்தை எடுத்துக்கொண்டிருந்தார் ரவிக்குமார். அந்த நேரத்தில் ரஜினி ரவிக்குமாரிடம் என்ன வேலை போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்டாராம். அப்போது வரலாறு படத்தை பற்றி சொல்லியிருக்கிறார். உடனே சூட்டிங்கில் வந்து பார்த்த ரஜினி ரவிக்குமாரிடம் இந்த படத்தை பற்றி சொல்லியிருந்தால் நானே நடித்திருப்பேனே? என்று கூறினாராம்.
இதையும் படிங்க :நடிப்பதற்கு முன் இந்த வேலையெல்லாம் செஞ்சாரா பார்த்திபன்!.. ஆச்சர்யமா இருக்கே!..
அஜித்திற்கு விருந்து கொடுத்த ரஜினி
அதன் பின் வரலாறு படம் முடிந்து அதன் முதல் ப்ரிவியூவை ரஜினி வந்து பார்த்து ஆச்சரியப்பட்டாராம். அதில் அஜித்தின் நடிப்பை பார்த்து அசந்து போய்விட்டாராம். அதன் பின் அஜித்தையும் ஷாலினியையும் வீட்டிற்கு வரவழைத்து விருந்தும் கொடுத்தாராம் ரஜினி. இந்த சமயத்தில் தான் அஜித் ரஜினியிடம் பில்லா படத்தை ரீமேக் செய்து கொள்ளலாமா என்று கேட்டு பில்லா படம் உருவாகியிருக்கிறது. இந்த செய்தி வரலாறு பட ரிலீஸ் நேரத்தில் ரவிக்குமார் ஒரு பேட்டியின் போது கூறியிருக்கிறார்.