ஸ்ரீராகவேந்திரர் மீது கடுப்பான ரஜினிகாந்த்… முன்னணி நடிகர் மூலம் சூப்பர்ஸ்டாருக்கு வந்த தகவல்!...
Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்ரீராகவேந்திரரை பிடிக்கும் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் அவர் மீதே ரஜினிக்கு கோவம் வந்து பேசாமல் இருந்த சம்பவமும் நடந்ததாம். அந்த பிரச்னை எப்படி தீர்ந்தது என்ற சுவாரஸ்ய தகவல்கள்.
வீட்டில் இருந்தவர்கள் ராகவேந்திரர் சாமியை வணங்கியதால் ரஜினிகாந்தும் அவரை வணங்கி வந்தாராம். ஆனால் அப்போது பெரிய அபிப்ராயம் இல்லாமல் இருந்தாராம். ஒருநாள் திடீரென ஸ்ரீ ராகவேந்திரர் ரஜினியின் கனவில் தோன்றி சில மாயங்கள் செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நோ சொன்ன அஜித்… விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்… அப்போவே அப்படியா?
அன்றில் இருந்து தான் ரஜினிகாந்துக்கு அவர் மீது பெரிய பிரியம் வந்ததாம். ஆனால் வெளியில் கோயில் போனால் மக்கள் கூடுவதால் பிறருக்கு தொந்தரவு என்பதை ரஜினிகாந்த் புரிந்துகொள்கிறார். இதனால் வீட்டிலே சாமி கும்பிடுவதை வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார்.
ரஜினிகாந்த் 25வது படம் நடிக்கும் போதே ஒரு ஆசை துளிர் விட்டது. தன்னுடைய நூறாவது படத்தில் ஸ்ரீராகவேந்திரராகத் தோன்ற வேண்டும் என்பது தானாம். நாளாக நாளாக அந்த ஆசை வளர்ந்து கொண்டு இருந்து இருக்கிறது. கன்னட நடிகர் ராஜ்குமாரும் ஸ்ரீ ராகவேந்திரராக நடித்து இருந்தார்.
இதையும் படிங்க: பவர் ஸ்டார் சொன்னதை உண்மையாக்கிய சூப்பர் ஸ்டார்.. இனிமே சிங்கம் மிங்கிள்தான்! களைகட்டும் ‘ரஜினி171’
கே.பாலசந்தரிடம் சொல்லி அந்த படத்தில் ரஜினி நடித்தும் விட்டார். விரதம் இருந்து கடுமையாக போராட்டத்துக்கு பின்னர் ஸ்ரீராகவேந்திரராக திரையில் தோன்றினார். ஆனால் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இது ரஜினியை ரொம்பவே கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. காசுக்காக நான் இதை எடுக்கவில்லை. உங்கள் அபார சக்தியை ஊருக்கு சொல்லவே இதை செய்தேன். அந்த படத்தினை ஓட வைக்காமல் இருந்தால் நீங்கள் என்ன மகான்.
உங்களை கொஞ்ச நாளுக்கு நான் கும்பிடவே மாட்டேன் என வைராக்கியாமாக கூறி 15 நாட்களுக்கு அவர் பக்கமே போகவில்லையாம். அப்போ ராஜ்குமாரை எதேர்ச்சையாக ரஜினிகாந்த் சந்தித்து இருக்கிறார். பின்னர் அவரும் ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீராகவேந்திரர் படத்தினை பார்த்துவிட்டு பாராட்டினாராம்.
ஆனால் என் படம் முதலில் ஓடவில்லை. அப்புறம் தான் வரவேற்பு கூடியது. உங்களுக்கும் அப்படி நடக்கும் எனச் சொல்லி சென்றாராம். அவர் சொன்னது ஸ்ரீராகவேந்திரரின் வாக்கு மாதிரியே ரஜினிக்கு தோன்றியதாம். அவரின் வாக்குக்கு ஏற்ப ரஜினியின் ராகவேந்திரர் படம் அதற்கு பின்னர் தொடர்ச்சியாக வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆதாயம் இல்லாம செய்யமாட்டார் ஆண்டவர்! கமல் செஞ்ச வேலையால் பணம் கொட்டுச்சு.. மிதப்பில் தயாரிப்பாளர்