பாபா படத்தின் சுவாரஸ்ய தகவலை கொடுக்க போட்டி போட்ட பத்திரிக்கைகள்... என்னென்னலாம் பண்ணிருக்காங்க தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பாபா படம் படப்பிடிப்பு சமயத்தில் போட்டி போட்டுக்கொண்டு பத்திரிக்கைகள் வெளிட்ட சுவாரஸ்ய தகவல்கள் குறித்த சேதி உங்களுக்காக.
கதை, திரைக்கதை ரஜினிகாந்த் எழுதி சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் தான் பாபா. இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 2002ல் திரைக்கு வந்த இப்படம் கோலிவுட் வட்டாரத்திலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாகியது.
ஒவ்வொரு பத்திரிக்கை ஊடகமும் போட்டி போட்டு அதன் தகவலை வாரா வாரமும் ரசிகர்களுக்கு இறக்கியது. பாபா படத்தின் அதிகாரப்பூர்வமாக படக்குழு ஐந்து ஸ்டில்கள் வெளியிட்டது. பத்திரிக்கைகள் களமிறங்கி அவர்கள் புகைப்படக்காரர்களை அனுப்பி எக்கசக்க ஸ்டில்களை வெளியிட்டது. உட்சபட்சமாக ஜூனியர் ஆர்டிஸ்ட்களிடம் எல்லாம் பாபா படம் குறித்து அப்டேட் கிடைக்குமா என களமிறங்கினர். அவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையை கூட செய்தியாக போட்டனர்.
இதையும் படிங்க: ரஜினி ஆசைப்படுவது சரியா?..இப்போதாவது ஹிட் அடிக்குமா பாபா?!..என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்?.
பிரபல தமிழ் நாளிதழ் மேலும் ஒரு படி இறங்கி வாலிபால் சண்டை நடக்கும் காட்சிகளை வரி வரியாக கதையாகவே எழுதி இருந்தனர். இதை பார்த்த படக்குழுவிற்கு ஏகப்பட்ட அதிர்ச்சியாக இருந்ததாம். ஒரு படத்திற்காக பிரபல பத்திரிக்கைகள் ஷூட்டிங்கிற்கு செல்ல ஊழியர்களை நியமித்தது என்றால் அது பாபா படத்திற்கு தான். ஆனால் இத்தனை எதிர்பார்ப்புகளை மீறி வெளியான பாபா மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. தற்போது மீண்டும் இந்த படத்தினை ரி-ரிலீஸ் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.