ரஜினியின் கேரியர் அவ்வளவு தான்… ஒரே படத்தில் போராடி மீண்டெழுந்த சூப்பர்ஸ்டார்…

Published on: March 2, 2024
---Advertisement---

Rajinikanth: ரஜினிகாந்த் எவ்வளவு அதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இருக்கிறார். ஒரு காலத்தில் அவரிடம் அத்தனை பிரச்னைகள் இருந்தது. அதனால் அவருக்கு திடீர் உடல்நல கோளாறு ஏற்பட சினிமாவில் இருந்து விலகும் நிலை உருவாகிறது.

வில்லன், குணசித்தர கேரக்டர், ஹீரோ என கோலிவுட்டில் எண்ட்ரி மூன்றே வருடத்தில் தனி நாயகன் அந்தஸ்த்தை பெற்றவர் ரஜினிகாந்த். முள்ளும் மலரும், தப்புத்தாளங்கள் என கதைக்காக அவர் நடித்த படங்கள் ஒரு பக்கம் என்றால் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தர்மயுத்தம்.

இதையும் படிங்க: அதானே திருந்திட்டா எப்படி? அதெல்லாம் நடக்காது… சபரிமலை ட்ரிப்பில் ரஜினி செய்த காமெடி

ஆர்.சி.சக்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இப்படத்தில் ஸ்ரீதேவி, தேங்காய் சீனிவாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படம் அப்போதே மெடிக்கல் துறையில் நடக்கும் ஊழல் குறித்து பேசி இருக்கும். இப்படத்தில் இளையராஜாவின் இசை மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இதில் பெளர்ணமியன்று ஹீரோவை சங்கிலியில் கட்டி வைத்தால் மட்டுமே அடக்க முடியும் என்ற அமானுஷ்யம் பிரச்னை இருக்கும். இதில் ரஜினி கொஞ்சம் மூர்க்கமாக நடிக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் தான் அவருக்கு உடல்நல பிரச்னை வந்தது. பெளர்ணமி தினத்தில் அடையாறு ஆலமரத்தில் அவரை கட்டி வைக்க வேண்டும். இந்த காட்சியை எடுக்க படக்குழு தயாராக இருந்தும் ரஜினி வரவே இல்லையாம்.

இதையும் படிங்க: அப்பா ‘அன்பே சிவம்’ படம் ஓடாது!.. துள்ளிக் குதித்த இயக்குனர்!.. சுந்தர்.சி சொன்ன சோகக்கதை!..

அந்த சமயத்தில் தான் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். மீண்டு வருவாரா என தயாரிப்பாளர் ஜாக்பாட் சீனிவாசன் கவலையில் இருந்தாராம். இருந்தும், அதில் இருந்து மீண்டும் அவர் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள வரும் போது அவரின் டீடேக் வாங்கவே இயக்குனர் பயந்தாராம். ஒரு சண்டை காட்சியில் ரீ டேக்கை கூட படத்தின் வசனகர்த்தாவான பீட்டர் செல்வக்குமார் தயங்கியப்படி கேட்டே ஓகே வாங்கினாராம்.

அவரால் முடிந்த வரை மட்டுமே ரஜினி நடித்து கொடுத்தாராம். அவர் நன்றாக இருந்து இருந்தால் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என படக்குழு கவலைக்கொள்ள ரஜினிக்கும் அந்த வருத்தம் இருந்ததாம். இத்தனை போராட்டங்களை தாண்டி ரிலீஸான அப்படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.