குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி - வைரல் புகைப்படங்கள்...
இந்திய சினிமா உலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில ஏற்ற இறக்கங்களை பார்த்தாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை வசூல் மன்னனாக இருப்பவர்.
72 வயதிலும் சுறுசிறுப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு சினிமா துறையின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடம் டிசம்பர் 12ம் தேதி ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில்,நேற்று ரஜினி தனது வீட்டிலேயே தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் மனைவி லதா,மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா,ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, பேரன்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.