விஜய்யை விட வேகமா இருக்காரே ரஜினிகாந்த்!.. அந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிட்டாராம்!..

இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கோட் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபுதேவா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை.

ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்து விட்டதாக நடிகர் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: கமல் ஏன் டென்ஷன் ஆனாரு?. ரஜினி எப்படி ஜாலி மேனா இருந்தாரு!.. ஜனகராஜ் கலகல பேட்டி

73 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் செம ஸ்பீடாக வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரானா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் ஆயுதபூஜை பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து விட்டதாக அறிவித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படமும் நடிகர் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த நடிப்பெல்லாம் எனக்கு தெரியாது… சிவாஜியிடம் செமையாக வாங்கிக்கட்டிய பத்மினி…

வட இந்தியாவிலும் பிசினஸ் செய்வதற்காக அமிதாபச்சன் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் திரைப்படத்தின் கதை வழக்கமான ரஜினிகாந்த் படமாக இருக்காது என சமீபத்தில் நடிகர் ராணா டகுபதி அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள விஜயின் கோட் படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் அதற்காக நடிகர் விஜய் தற்போது அமெரிக்காவில் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட ரஜினிகாந்த் அடுத்த மாதமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் படத்துக்கு காலை உடைத்துக்கொண்டு வந்து நின்ற ரகுவரன்… எந்த படத்துக்கு தெரியுமா?

 

Related Articles

Next Story