Connect with us
indian

Cinema News

இந்தியன் 2 விழாவுக்கு நோ சொன்ன ரஜினி!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா சூப்பர்ஸ்டார்?!..

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் அறிமுகமான அபூர்வராகம் படத்தில் கமல்தான் ஹீரோ. அதாவது ரஜினி சினிமாவில் அறிமுகாகும்போதே கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். இது ரஜினிக்கும் தெரியும். அதன்பின் தொடர்ந்து கமலுடன் இணைந்து படங்களில் நடித்தார் ரஜினி.

ஒருகட்டத்தில் இருவரும் பேசி முடிவெடுத்துவிட்டு தனித்தனியாக பிரிந்து நடிக்க துவங்கினர். கமல் காதல் மன்னனாகவும், ரஜினி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார்கள். திரையுலகில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தாலும் நிஜ வாழ்வில் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கருடன் விழாவில் அசிங்கப்பட்ட சசிக்குமார்!. பழசெல்லாம் மறந்துபோச்சா விஜய் சேதுபதி?!…

சினிமாவில் இப்படி இரண்டு நடிகர்கள் கிட்டத்தட்ட 50 வருடங்களாக நண்பர்களாக இருப்பது என்பது அரிதிலும் அரிது. ஒரு மேடையில் ‘என்னையும் ரஜினியையும் போல நண்பரக்ள் சினிமாவில் எவனும் கிடையாது’ என சவாலே விட்டார் கமல்ஹாசன். அந்த அளவுக்கு இருவரின் நட்பும் தொடர்ந்து வருகிறது.

கமலின் பல படங்களை பார்த்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்கே போய் பாராட்டிவிட்டு வந்தவர்தான் ரஜினி. கமல் நடித்த ஹேராம் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்திருக்கிறார் . ரஜினி எப்போதும் வியந்து பார்க்கும் நடிகராக கமல் எப்போதும் இருக்கிறார். பல சினிமா விழாக்களில் இருவரும் பரஸ்பரம் அன்பை பறிமாறிக்கொள்வதை நாம் பார்க்கிறோம்.

இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைய இருக்கும் முக்கிய நடிகை… இது அஞ்சாவது முறையாம்!…

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு வர வேண்டும் என ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஷங்கர். ஆனால், ‘அங்கு முழுக்க கமல் ரசிகர்கள் இருப்பார்கள். நான் எதையாவது பேசி கமல் ரசிகர்கள் எதாவது கமெண்ட் அடித்தால் அது எனக்கும் சங்கடமாகி விடும். கமலுக்கும் சங்கடமாகி விடும்’ என சொல்லிவிட்டாராம் சூப்பர்ஸ்டார்.

அதேநேரம், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தோனியை வரவழைக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறார். தோனி சமீபத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். எனவே, இந்தியன் 2 விழாவில் அவர் கலந்து கொண்டால் ஆச்சர்யம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top