எனக்கு பிடிக்கல.. ஆனா உங்களுக்காக நடிக்கிறேன்!.. ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!..
Rajinikanth: தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இயக்குனர்களின் கதையில் ரஜினிகாந்த் நுழையவே மாட்டார். ஆனால் தனக்கு பிடிக்காத ஒரு கதையையே ஏவிஎம் மீது இருந்த நம்பிக்கையில் தைரியமாக செய்த சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ரஜினிகாந்த் வளர்ந்து கொண்டு இருந்த சமயத்தில் ஏவிஎம் சரவணனை பார்த்தாராம். எனக்கு ஏவிஎம்மில் படம் நடிக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். அவர் விருப்பத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட சரவணன் சம்பளம் குறித்து கேட்க ‘இப்போ என் சம்பளம் இது. நான் சீக்கிரம் வளருவேன். அப்போ இருக்க சம்பளத்தை கொடுங்க. நான் மார்க்கெட்டில் இல்லை என்றால் என்னை வைத்து படமே எடுக்க வேண்டாம்’ என்றாராம்.
இதையும் படிங்க: பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?
அவர் பேச்சு பிடிச்சு போக ‘அட்வான்ஸ் வாங்கி கொள்கிறீர்களா?’ எனக் கேட்க ‘வேண்டாம் கால்ஷீட் கொடுத்துவிட்டு பாத்துக் கொள்கிறேன்’ எனக் கூறிவிட்டார். பின்னர் சிலகாலம் கழித்து ஏவிஎம் மற்றொரு நடிகரின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க கடைசியில் அவர் நடிக்க முடியாமல் போகிறது.
உடனே ரஜினியிடம் பேசலாம் என யோசிக்கின்றனர். ஏவிஎம் ஆபிஷில் இருந்து நேரம் கேட்க வீரப்பன் என்பவரை அனுப்பி வைக்க அப்போது ரஜினியும் வீட்டில் இருந்தாராம். அவரிடம் அப்போ கார் இல்லாததால் வீரப்பனின் ஸ்கூட்டியில் மழையில் நனைந்து கொண்டே வந்தாராம் ரஜினி. பில்லா ஹிட்டாகி இருந்த சமயத்தில் மழையில் வந்து பேசியதை பார்த்த சரவணன் அதிர்ந்துவிட்டார்.
இதையும் படிங்க: தன் மகளை அந்த நடிகை போல ஆக்கனும்னு ஆசைப்பட்ட வனிதா! கடைசில என்னாச்சு தெரியுமா?
அப்போது அவர் உச்சத்தில் இருக்க கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்தே நடித்து கொடுத்தாராம். அந்த படம் தான் முரட்டுக்காளை. படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து ஒரு தெலுங்கு படத்தினை ரீமேக் செய்ய ஏவிஎம் முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த படம் ரஜினிக்கு பிடிக்கவே இல்லை. இந்த கதை எனக்கு செட்டாகாது. கமலிடம் கேட்டு பாருங்களேன் என்றாராம்.
கமலும் அப்போது தான் அதே மாதிரி இருந்த காக்கி சட்டை படத்தில் நடித்து இருக்கிறார். இதனால் ரஜினி நடிக்க வேண்டும் என ஏவிஎம் வற்புறுத்தி கேட்டார்களாம். யோசித்த ரஜினி எனக்கு பிடிக்கவில்லை. இருந்தும் உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் நடிக்கிறேன் என அவர் சொல்லி நடித்த திரைப்படம் தான் போக்கிரி ராஜா. இரட்டை வேடத்தில் ரஜினி நடித்த அந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட நடிச்ச ஆளுசார் நான்.. காசு பணமா கேட்க போறேன்! விஜயை பார்க்க சென்ற இடத்தில் அவமானப்பட்ட நடிகர்