More
Categories: Cinema News latest news

ரஜினியோட இத்தனை படம் ஃபிளாப்பா?.. சூப்பர் ஸ்டார் ரசிகரே இப்படி சொல்லிட்டாரே!…

நடிகர் ரஜினிகாந்த்  நடித்து கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்துக்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான காலா படம் மட்டுமே பெரிய வசூல் வேட்டை நடத்தியது என்றும் மற்ற படங்கள் எல்லாம் ஃபிளாப் என ரஜினிகாந்த் ரசிகர் சத்யன் ராமசாமி பேசிய பேட்டி வீடியோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி காலா படத்தில் நடித்ததால் தான் அந்த படம் ஓடவே இல்லை என்றும் 2.0 திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் செய்யவில்லை என்றும் அந்த படத்தின் பாதி வசூல் இந்தியில் அக்‌ஷய் குமார் நடித்த நிலையில் தான் வந்தது என்றும் கூறியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: காலை பெங்களூர்… மாலையில் சென்னை.. ஒரே வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த 20 திரைப்படங்கள்…

மேலும், தர்பார் மற்றும் அண்ணாத்த படத்தில் நாங்க வாங்காத அடியா என்றும் அரசியல் எல்லாம் இல்லை என ரஜினிகாந்த் சொன்ன நிலையில், தான் ஜெயிலர் படம் ஓடியது என சத்யன் ராமசாமி பேசியுள்ளார்.

அரசியலுக்கு வருகிறேன் என விஜய் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், கோட் படம் படு ஃபிளாப்பாகும் என்றும் தளபதி 69 படத்தின் நிலையும் அதுதான் என்பதை சொல்வதற்காகத்தான் இப்படி சத்யன் ராமசாமி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அவங்க ஏன் அங்க இருக்காங்க? போக சொல்லு… உதவியாளரை கடிந்துக்கொண்ட நடிகர் விஜய்…

இந்த பேட்டியை தற்போது ஷேர் செய்து ஒருவழியா ரஜினி ரசிகரே இத்தனை படங்கள் ஃபிளாப் என சொல்லி விட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.

 

Published by
Saranya M