கோடிகளில் புரளும் ரஜினிகாந்தின் தந்தை கட்டிய 2000 ரூபாய் வீடு… பழசை மறக்காத சகோதரர்கள்… என்ன நடந்தது?

by Akhilan |
கோடிகளில் புரளும் ரஜினிகாந்தின் தந்தை கட்டிய 2000 ரூபாய் வீடு… பழசை மறக்காத சகோதரர்கள்… என்ன நடந்தது?
X

Rajinikanth: தமிழ் சினிமாவில் இன்று ரஜினிகாந்தின் சம்பளமே பல கோடிகள். ஆனால் அவரின் இளமை காலம் அத்தனை இனிமையானது இல்லை. அதிலும் அவர் தந்தையின் சொற்பமான வருமானத்தில் கட்டிய வீடு குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

பெங்களூர் மாநகரத்தின் அனுமந்தா நகரில் இருக்கிறது ரஜினிகாந்தின் பூர்வீக வீடு. அவரின் தந்தை ரானோஜிராவ் போலீஸ்காரராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பணியில் இருந்து ஓய்வு பெற்றபோது 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: எங்க அப்பா சரியான மிலிட்ரி… அந்த ஒரு விஷயத்தை சரியா செஞ்சிருக்கணும்… தளபதி சொல்லும் சீக்ரெட்

அதில் 800 ரூபாயை எடுத்து அரை கிரவுண்டுக்கு குறைவான இடத்தை வாங்குகிறார். மீதி இருந்த 2000 ரூபாயில் வீட்டையும் கட்டி முடித்தாராம். அவருக்கு மாதா மாதம் ஓய்வூதியமாக 30 ரூபாய் கொடுப்பார்களாம். அவர் இறக்கும் போது கடைசியாக 160 ரூபாய் வாங்கினாராம்.

அதே வீட்டில் தான் ரஜினிகாந்தின் அண்ணனுக்கு திருமணம் நடத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து 1977ம் ஆண்டு வீட்டின் பின்புறம் இருந்த காலி இடத்தில் சத்யநாராயண ராவ் சின்ன பில்டிங்கை எழுப்பினாராம். அந்தப் புதிய கட்டிடத்திற்கும் ரஜினியிடம் இருந்து ஒரு சிறிய தொகையை மட்டுமே அண்ணன் சத்யநாராயண ராவ் வாங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: பாட்ஷாவில் போட்ட சபதத்தை பாபாவில் நிறைவேற்றிய பிரபலம்… அப்படி என்னதான் நடந்தது?

அடுத்த சில ஆண்டுகளில் வேறு இடங்களில் கடன் வாங்கி தான் மேல் மாடியைக் கட்டினாராம். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தன்னால் முடியாத விஷயத்துக்கு மட்டுமே என் தம்பியை கேட்பேன். அதே நேரத்தில் நான் என்ன கேட்டாலும் செய்துவிடுவார் எனவும் குறிப்பிட்டு இருப்பார்.

தந்தை ரானோஜிராவ் இறந்த பின்னர், அவர் கட்டிய வீட்டை நினைவு இல்லமாகவே பராமரித்து வந்து இருக்கின்றனர். ஆனால் மண் வீடு என்பதால் ஒரு கட்டத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்ததாம். அதை தொடர்ந்தே அந்த வீட்டை இடிக்க சத்யநாராயண ராவ் தம்பியிடம் அனுமதி கேட்டாராம்.

ரஜினியும் சரியென கூறிய பின்னரே சத்யநாராயண ராவ் தன் சொந்த செலவில் வீட்டை கட்டி இருக்கிறார். அந்த வீட்டில் ஸ்ரீ ரானோஜி ராவ் கெய்க்வாட் அண்டு சன்ஸ் என்று பளிங்குக் கல்லில் கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ளதும் கூடுதல் சுவாரஸ்ய தகவல். அந்த வீடு கட்டவும் ரஜினியிடம் இருந்து எந்த தொகையையும் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராத்திரி ஷோவிற்கு திருட்டுத்தனமாக சென்ற ரஜினிகாந்த்… வீட்டில் மாட்டிவிட்ட மழை… சுவாரஸ்யமா இருக்கே!..

Next Story