ரஜினிகாந்தின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் இல்லையா? அட இது என்னப்பா புது கதை…
Rajinikanth: ரஜினிகாந்த் கண்டெக்டராக இருந்து திரைப்பட கல்லூரியில் படித்து நடிகரானார். தனியாக ஆரம்பித்த அவர் பயணம் இன்று கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக்கி இருக்கிறது. ஆனால் அவர் முதலில் நடித்தது அபூர்வ ராகங்கள் இல்லை என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ரஜினிகாந்திடம் இருந்த ஸ்டைலுக்காக அவர் நண்பர் சொல்லி சென்னை திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு அவருக்கு சில நண்பர்கள் கிடைத்தனர். அங்கும் அவர் தன்னுடைய சேட்டையை செய்ய தவறவே இல்லையாம். அப்படி ஒருமுறை தெலுங்கு வகுப்பு மாணவர்களுக்கு அதிக படம் காட்டப்பட்டதாம். ஆனால் கன்னட மாணவர்களுக்கு அவ்வளவு படம் இல்லையாம்.
இதையும் படிங்க: செந்திலுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி.. அதன் சுவாரஸ்ய பின்னணி இதோ
இதனால் ரஜினியின் நண்பரான அசோக் அதை தட்டிக்கேட்டு இருக்கிறார். அதுகுறித்து திரைப்பட கல்லூரி முதல்வர் அசோக்கை விசாரித்து கொண்டு இருந்தாராம். அப்போ வெளியில் இருந்த ரஜினிகாந்த், ஓவராக பேசிய தெலுங்கு மாணவரை அடித்துவிட்டாராம்.
இதனால் அசோக்கை சஸ்பெண்ட் செய்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. பின்னர் கல்லூரி முடிந்து எல்லாரும் இயக்குனராகவும், நடிகராகவும் ஆசைப்பட்டு பல தயாரிப்பாளர்களை தொடர்ந்து சந்தித்து தங்கள் புகைப்படங்களை கொடுத்து விட்டு வருவார்களாம்.
படிப்பு முடிந்தாலும் பிலிம்சேம்பரில் திரைப்படம் போடும் போது ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர்களுடன் சென்று படம் பார்க்கும் வழக்கத்தை வைத்து இருந்தார்களாம். அப்படி ஒருமுறை பிரேமத காணிக்கை என்ற கன்னட படத்தினை பார்த்தார்களாம். படத்தின் நாயகி ஆர்த்தி போலீஸ் நிலையத்துக்கு வருவார்.
இதையும் படிங்க: பிரச்னை உங்களை தேட வரலை பாக்கியா… நீங்களே தான் போய் சிக்கிடுறீங்க… மீண்டும் மீண்டுமா?
இன்ஸ்பெக்டர் ரவுடிகளின் படங்களைக் கொடுத்து அடையாளம் காட்டச் சொல்வார். நாயகி படங்களில் ரஜினி, ரவீந்திரநாத், சதீஷ், அசோக் மற்றும் பல திரைப்பட மாணவர்களின் புகைப்படங்கள் இருந்ததாம். முதலில் அது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்ததாம்.
ஆனால் அப்படியாவது வாய்ப்பு கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு கொண்டார்களாம். படம் முடிந்து வெளிவரும் போது அப்படத்தின் இயக்குனர் சோமசேகர் வெளியில் இருந்தாராம். அவரிடம் நால்வரும் படத்தில் எங்களை நடிக்க வச்சதுக்கு நன்றி சொல்ல அவரும் அசடு வழிந்து நின்றாராம்.