கமல் அண்ணன் பொண்ணிடம் ஜொல்லு விட்ட ரஜினிகாந்த்… நாங்க சொல்லலை… அந்த நடிகையே சொல்லிட்டாங்கப்பா!
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் இப்போது தான் சினிமாவிலும், ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவர் சிறுவயதில் இருக்கும் போது நிறைய சேட்டைகள் செய்வாராம். அதிலும் நடிகை சுஹாசினியிடம் அத்துமீறி நடந்துக்கொண்ட ஒரு விஷயத்தினை அவரே சொல்லி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்துக்கு சிகரெட், மது பழக்கம் அதிகம். அதுமட்டுமல்லாமல் நிறைய பெண் தோழிகளும் ரஜினிக்கு உண்டு. எல்லாரிடமும் ஓபனாக பேசக்கூடியவர் தான் ரஜினிகாந்த். இதை பல இடங்களில் அவரே சொல்லியும் இருக்கிறார். கோலிவுட்டில் கூட சில நடிகைகளுடன் அவருக்கு காதல் கூட இருந்து இருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!
ஆனால் கமலின் அண்ணன் மகளிடம் ரஜினி ஜொல்லு விட்ட கதையை நடிகை சுஹாசினி சொல்லி இருப்பது ஆச்சரியத்தினை உருவாக்கி இருக்கிறது. இதுகுறித்து சுஹாசினி அளித்த பேட்டியில், சின்ன வயசில் எங்க அக்கா ரொம்பவே அழகா இருப்பாங்க. பார்க்கவே அம்சமா இருப்பாங்க.
ஒருநாள் ஆழ்வார்பேட்டை சிக்னலில் நானும், அக்காவும் வாக்கிங் போய் கொண்டு இருந்தோம். அப்போ அவங்க மெடிசின் படிச்சிட்டு இருந்தாங்க. நான் பத்தாவது ஸ்கூல் படிச்சிட்டு இருப்பேனு நினைக்கிறேன். நான் சின்ன பொண்ணா தான் இருப்பேன். வாக்கிங் சென்று கொண்டு இருக்கும் போதே எங்களை நெருங்கி ஒரு பியட் கார் வந்து நின்றது. கேர்ள்ஸ் லிப்ட் வேணுமா எனக் கேட்டாங்க.
இதையும் படிங்க: காரில் போகும்போது இளையராஜா என்ன பாடல் கேட்பார்?!. சீக்ரெட் சொல்லும் இயக்குனர்!..
நாங்க யாருடா எனத் திரும்பி பார்த்தோம். உள்ளே ரஜினி சார் இருந்தார். எங்க அக்காவோட அழகை பார்த்துட்டு லிப்ட் வேணுமானு கேட்டார். வேறு எதுவும் கேட்கவில்லை. நான் உடனே நாங்க கமல்ஹாசனோட அண்ணா பொண்ணுனு சொன்னேன். உடனே ஓடிவிட்டார் எனச் சிரித்துக்கொண்டே சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.