Cinema History
உங்களை சேர்த்தது தப்புதான்..கடிந்துக்கொண்ட பிரபல நடிகர்… இனி செய்ய மாட்டேன்.. வாக்கு தந்த ரஜினிகாந்த்
Rajinikanth: இப்போது இருக்கும் ரஜினிக்கும் 80களில் இருந்தவருக்கும் பெரிய மாற்றம் உண்டு. ஆன்மீகவாதி அவ்வளவு சுத்தமானவர் எனக் கூறப்படும் ரஜினி தன்னுடைய இளமை காலத்தில் செய்யாத சேட்டையே இல்லை. அப்படி அவருக்கு அத்தனை கெட்ட பழக்கமும் இருந்ததாம்.
ஆனாலும் கூட அவருக்கு இருந்த சாமி பக்தியும் வளர்ந்து கொண்டே போனது. இவருக்கு நேரெதிரானவர் நம்பியார். சினிமாவில் மட்டும் தான் அவர் கடுமையான வில்லன். நேரில் அத்தனை அமைதியானவர். அவர் பல வருடங்களாக மாலை போட்டு மலைக்கு செல்வது வழக்கம். அவ்வப்போது அவருடன் சில நடிகர்களும் வருவார்கள்.
இதையும் படிங்க: வெங்கட் பிரபு தொடங்கி விட்டது… விஜய் ரூட்டையே ஃபாலோ செய்யும் ரஜினிகாந்த்… இந்த விஷயமுமா?
அப்படி ஒருமுறை ரஜினிகாந்தும் மாலை போட்டு நம்பியாருடன் மலைக்கு போக இருந்தார். விரதம் இருக்கும் போது கெட்ட பழக்கங்களை தொடவே கூடாது என கறாராக சொல்லி இருக்கிறார் நம்பியார். ஆனால் சொல்பேச்சு கேட்காத ரஜினிகாந்த் மாலை போட்டும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தினை வைத்து இருந்தார்.
இப்படி ஷூட்டிங்கிலே அவர் சிகரெட் பிடிக்க அதை பார்த்த சிலர் நேராக நம்பியாரிடம் இந்த விஷயத்தினை வத்தி வைத்து விட்டனர். இதில் நம்பியாருக்கு செம கோபம் வந்ததாம். அத்தனை முறை கட்டுப்பாடுகளை சொல்லியும் இவர் கேட்காமல் இப்படி செய்கிறாரே? எனச் சலித்து கொண்டவர். நேராக ரஜினிக்கு கால் செய்கிறார். ஆனால் அவர் இல்லாததால் மேனேஜர் போனை எடுத்து பேசினாராம்.
இதையும் படிங்க: தமிழ்ப்படங்களில் அதிக முறை தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் யார் தெரியுமா?
நான் அவ்வளவு சொல்லியும் ரஜினி மாலை போட்ட பிறகும் சிகரெட் புகைக்கிறார் என்ற தகவல் வந்தது. அதனால் அவர் என்னுடன் வர வேண்டாம். பயணக் கட்டணமாக அவர் கொடுத்த 500 ரூபாயுடன் மேலே நான் 500 ரூபாய் சேர்த்து 1000 ரூபாயா தரேன். உடனே வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி வைத்துவிட்டார். மறுநாள் படப்பிடிப்பில் நம்பியாரை நேராக வந்து சந்தித்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
நான் மேனேஜரிடம் சொல்லிவிட்டேனே. அது உண்மைதான். உங்களைச் சேர்த்தற்கு அபராதம் எனக்கு 500 ரூபாய். அதையும் சேர்த்து தான் 1000 ரூபாய் தருகிறேன் எனச் சொல்லிவிட்டு தன்னுடைய உதவியாளரை அழைத்து பணத்தினை கொண்டு வா என்றாராம். ரஜினி சங்கடத்துடன், என்னை மன்னிச்சிடுங்க, இனி சிகரெட் குடிக்கமாட்டேன் என்று உறுதி அளித்து இருக்கிறார். அதை தொடர்ந்த் மீண்டும் கறார் காட்டியே நம்பியார் ரஜினியை தன்னுடன் மலைக்கு அழைத்து சென்றாராம்.
இதையும் படிங்க: இறப்புக்கே வராத அஜித்… நன்றிக்கடனுக்காக சாதாரண மனிதரின் இறுதிச் சடங்கில் கடைசி வரை ஆச்சரிய பின்னணி…