ராகவேந்திரரா நடிச்ச நீங்க இப்டி பண்ணலாமா?… விமானத்தில் ரஜினிகாந்தை கண்டபடி திட்டிய ரசிகை!
Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன் இமேஜினை கெடுத்துக்காமலே படத்தினை நடிப்பதையே வழக்கமாக வைத்து இருக்கிறார். அப்படி இருக்கும் ரஜினியையே ஒரு ரசிகை விமானம் என்று கூட பார்க்காமல் சரமாரியாக திட்டிய சம்பவமும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனாக அறிமுகமானால் கூட தொடர்ச்சியாக நடிப்பின் மூலம் நடிகராக வாய்ப்பு கிடைத்தது. வரிசையாக கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டவர் கோலிவுட்டின் தனக்கென ஒரு அடையாளத்தினை தக்க வைத்தார்.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் பாக்கியராஜ்தான் காரணம்; அவர்தான் எங்களுக்கு தலைவலி – புலம்பும் மோகன்ராஜா
தொடர்ச்சியாக இன்று தமிழ்சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்ற அடையாளத்துடன் வலம் வருகிறார். ரஜினி தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருங்கமான காட்சிகளில் நடிப்பதை விரும்ப மாட்டாராம். இத்தனை படங்களிலும் ஒருமுறை கூட நடிகைக்கு லிப்லாக் காட்சிகளில் நடித்ததே இல்லை.
அப்படி பல விஷயங்களை கட்டுப்பாடாக வைத்திருக்கும் ரஜினிகாந்தினையே ஒரு வயதான பாட்டி விமானத்திலேயே வைத்த கண்டமேனிக்கு திட்டி தீர்த்து இருக்கிறார். ராகவேந்திரராக நடித்த நீங்கள் இப்படி ஒரு படத்தில் நடிக்கலாமா?
இதையும் படிங்க: ரஜினி நடிக்க வேண்டிய கதையில் நடித்த பாக்கியராஜ்!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சி!..
பெண்களை இப்படியா பேசி நடிப்பீர்கள் என சரமாரிக்கு கேட்டு இருக்கிறார். அந்த பாட்டியின் பேரன் பதறியடுத்து ஓடிவந்து மன்னித்து விடுங்கள் என்றார். ஆனால் ரஜினி அசராமல் அவங்க பேசுவது சரி தான். பேச விடுங்கள் எனக் கூறினாராம்.
ரஜினி அவர் பேசியதை பொறுமையாக கேட்டவர். இனி அப்படி படங்களில் நடிக்கவே மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் எனக் கூறி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு வந்தாராம். அந்த பாட்டி திட்டிய படம் மாவீரன். அப்படத்தினை தொடர்ந்து ரஜினி பெண்களை இழிவுப்படுத்தும் படங்களில் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.