நீ சொன்ன கதை நல்லாவே இல்ல… லோகேஷின் முகத்தில் அடித்த போல சொன்ன ரஜினிகாந்த்… இது வேறயா!...

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க போகும் தலைவர்171 படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் லோகேஷிடம் காரசாரமாக நடந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ரொம்பவே சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கதைகள் கேட்டு ஒப்பந்தம் செய்து இருந்தார். அந்த வகையில் சில மாத இடைவேளையில் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அந்த படம் ஓடலன்னா கன்னியாஸ்திரி ஆகி இருப்பேன்.. விஜயகாந்த் பட நடிகை சொன்ன பகீர் தகவல்…
இப்படத்தினை டி.ஜே.ஞானவேல் இயக்க இருக்கிறார். என்கவுண்ட்டரை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது. ஜெயிலருக்கு பின்னர் இப்படத்திலும் மல்ட்டி ஸ்டார் கூட்டணியாக உருவாகி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் தலைவர்171.
இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். படத்தில் டைட்டில் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். லோகேஷின் மற்ற படங்களை போல இல்லாமல் இப்படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பல வருடங்களுக்கு பின்னர் ரஜினிகாந்த் நெகட்டிவ் ஷேட்டில் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கிறது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா விவகாரத்தில் தவித்த ரஜினிகாந்த்… ஈகோ இல்லாமல் உதவிக்கு வந்த ஜெயலலிதா!…